அரசியல் செய்தி

தமிழ்நாடு

டிச., மாதம் மாநகராட்சி தேர்தல்:அமைச்சர் துரைமுருகன் பேச்சு

Added : செப் 25, 2021
Share
Advertisement
வேலுார்:வரும் டிச., மாதம் மாநகாராட்சி தேர்தல் நடக்க உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் பேசினார்.வேலுார் மாவட்டம், காட்பாடி மேற்கு, கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் காட்பாடியில் இன்று மாலை நடந்தது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசியதாவது:நான் கொண்டு வரும் திட்டங்கள்

வேலுார்:வரும் டிச., மாதம் மாநகாராட்சி தேர்தல் நடக்க உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் பேசினார்.வேலுார் மாவட்டம், காட்பாடி மேற்கு, கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் காட்பாடியில் இன்று மாலை நடந்தது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசியதாவது:நான் கொண்டு வரும் திட்டங்கள் உடனுக்குடன் கிடைக்கும் வகையில் செயல்படுபவர்கள் தான் ஊராட்சி மன்ற தலைவர்கள். எனவே, நகரங்களில் இருப்பவர்களும் கிராமங்களுக்கு சென்ற ஓட்டு சேகரியுங்கள்.சொன்ன வாக்குறுதிகளை நிரைவேற்றுபவன் துரைமுருகன். என்னை நம்பி 50 ஆண்டுகள் எனக்கு ஆதரவு அளித்து இருக்கிறீர்கள். தற்போது தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அவர்கள் நிச்சயம் உங்களுக்கு தேவையான உதவிகள் செய்து தருவார்கள்.

எனக்கு ஈட்டி வாள் ஆக இருப்பவர்கள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள். பொன்னையில் 48 கோடி ரூபாயில் உயர் மட்ட பாலம், அரசு கலைக்கல்லுாரி, மல்டி ஸ்பெசாலிட்டி மருந்துவமனை கொண்டு வந்துள்ளேன்.அடுத்தாண்டு தொழிற் பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிந்ததும் டிச., மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ளதால், தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X