கூட்டுறவுத் துறை புதிய கொள்கை விரைவில் அறிவிப்பு: அமித் ஷா

Added : செப் 25, 2021
Share
Advertisement
புதுடில்லி-''மத்திய அரசின் சார்பில், கூட்டுறவுத் துறைக்கான புதிய கொள்கைகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும்,'' என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.மத்திய அரசில் கூட்டுறவுத் துறையின் முக்கியத்துவம் கருதி, அதற்கென தனி அமைச்சகம் ஜூலையில் அமைக்கப்பட்டது.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இத்துறை ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த
கூட்டுறவுத் துறை புதிய கொள்கை விரைவில் அறிவிப்பு: அமித் ஷா

புதுடில்லி-''மத்திய அரசின் சார்பில், கூட்டுறவுத் துறைக்கான புதிய கொள்கைகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும்,'' என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மத்திய அரசில் கூட்டுறவுத் துறையின் முக்கியத்துவம் கருதி, அதற்கென தனி அமைச்சகம் ஜூலையில் அமைக்கப்பட்டது.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இத்துறை ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த தேசிய கூட்டுறவு மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:நாட்டில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

அவற்றின் எண்ணிக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்று லட்சமாக உயர்த்தப்படும்.கூட்டுறவுத் துறை மாநில அரசின் கைகளில் இருக்கும் நிலையில், மத்திய அரசில் ஏன் புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டது என சிலர் கேட்கின்றனர். இதற்கு சட்டரீதியான காரணங்கள் உள்ளன என்றாலும், அதற்குள் செல்ல இப்போது நான் விரும்பவில்லை. கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் பணிகளில் மத்திய அரசு, மாநிலங்களுடன் இணைந்து செயல்படும்.

கடந்த 2002ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூட்டுறவுத் துறையில் புதிய கொள்கைகளை அறிமுகம் செய்தார்.தற்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, விரைவில் புதிய கூட்டுறவு கொள்கையை அறிவிக்கும். நாட்டின் வளர்ச்சியில் கூட்டுறவுத் துறை அதிக பங்களிப்பை வழங்க முடியும் என்பதால் அதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் அமையும். இவ்வாறு அவர் கூறினார். மாநாட்டில் பல்வேறு கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள் 2,100 பேர் மற்றும் 'ஆன்லைன்' வாயிலாக ஆறு கோடி பேர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X