சில வரி செய்திகள்| Dinamalar

சில வரி செய்திகள்

Added : செப் 25, 2021
Share
காங்கிரஸ் நிர்வாகி ராஜினாமாதிருவனந்தபுரம்: கேரள மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி.எம்.சுதீரன், கட்சியின் அரசியல் விவகாரக் குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.கட்சியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு நடைமுறைகள் மீதான அதிருப்தி மற்றும் மாநில தலைவர் சுதாகரனின் செயல்பாடுகள் காரணமாகவே, இந்த திடீர் முடிவை சுதீரன் எடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள்
 சில வரி செய்திகள்

காங்கிரஸ் நிர்வாகி ராஜினாமா

திருவனந்தபுரம்: கேரள மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி.எம்.சுதீரன், கட்சியின் அரசியல் விவகாரக் குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.கட்சியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு நடைமுறைகள் மீதான அதிருப்தி மற்றும் மாநில தலைவர் சுதாகரனின் செயல்பாடுகள் காரணமாகவே, இந்த திடீர் முடிவை சுதீரன் எடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவதுாறு 'வீடியோ': 2 பேர் கைது

லக்னோ: உத்தர பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதுாறாக பேசி 'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமீபத்தில் 'வீடியோ' வெளியிட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பிரகாஷ் வர்மா, ரமேஷ் யாதவ் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

சிறைகளில் பாதுகாப்பு

புதுடில்லி: டில்லி ரோஹினி பகுதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நேற்று முன்தினம் போலீசார் அழைத்து வந்த பிரபல ரவுடி ஜிதேந்திர கோகியை இருவர் சுட்டுக் கொன்றனர். பின் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் பலியாயினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படுகொலைக்கு காரணமானவர்கள், கோகியின் எதிர்தரப்பு ரவுடி தில்லுவின் கும்பல் என கருதப்படுகிறது. இதனால் டில்லியில் இவர்களது ஆதரவாளர்கள் அடைக்கப்பட்டுள்ள சிறைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்தில் 4 பேர் பலி

ரேவா: மத்திய பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர், ஒரு டெம்போவில் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் சென்று கங்கையில் நீராடினர். சொந்த ஊர் திரும்பும் வழியில் ம.பி.,யின் ரேவா அருகே அவர்களின் டெம்போ, லாரி மீது மோதியது. இதில் நால்வர் பலியாயினர்.

5 அமைச்சர்களுக்கு 'கல்தா'

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் காங்., முதல்வராக பொறுப்பேற்ற சரண்ஜித் சிங் சன்னி, புதிய அமைச்சர்கள் பட்டியலுடன் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று சந்தித்தார். இதன்படி, அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று மாலை நடக்கவுள்ளது. இதில் ஏழு அமைச்சர்கள் புதுமுகங்கள் என்றும், முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் அமைச்சரவையில் இருந்த ஐந்து பேருக்கு புதிய அமைச்சரவையில் பதவி தரப்படாது என்றும் காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X