பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.300 கோடி மறைப்பு வரித்துறை கண்டுபிடிப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
சென்னை-சென்னையில் இரண்டு நிதி நிறுவனங்கள், 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை மறைத்ததை, வருமான வரித்துறை கண்டுபிடித்து உள்ளது.சென்னையில் செயல்பட்டு வரும், இரு தனியார் நிதி நிறுவனங்கள், வரையறையை தாண்டி வாடிக்கையாளர்களிடம் வட்டி பெறுவதாகவும், அதில் கணக்கில் காட்டப்படாத வருவாய்க்கு வரி செலுத்தாமல் மறைப்பதாகவும், வருமான வரித் துறைக்கு புகார்கள் வந்தன.அதன்

சென்னை-சென்னையில் இரண்டு நிதி நிறுவனங்கள், 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை மறைத்ததை, வருமான வரித்துறை கண்டுபிடித்து உள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும், இரு தனியார் நிதி நிறுவனங்கள், வரையறையை தாண்டி வாடிக்கையாளர்களிடம் வட்டி பெறுவதாகவும், அதில் கணக்கில் காட்டப்படாத வருவாய்க்கு வரி செலுத்தாமல் மறைப்பதாகவும், வருமான வரித் துறைக்கு புகார்கள் வந்தன.அதன் அடிப்படையில், இரு நிதி நிறுவனங்களுக்கு சொந்தமாக, சென்னையில் உள்ள 35 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அதில், இரு நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களிடம் வரையறையை தாண்டி பெறும் வட்டி வாயிலாக, 300 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. அது கணக்கில் காட்டப்படாத வருமானம்.அதுமட்டும் அல்லாமல், நிதி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை தாண்டி, வெவ்வேறு பெயர்களில் வங்கிக் கணக்குகளை துவக்கி, அவற்றில் வாடிக்கையாளர்களை வட்டி செலுத்த வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இரு நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத, 9 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X