அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை கட்டுப்படுத்த பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Updated : செப் 27, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-'கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, இறங்குமுகமாக செல்வதற்கான வழிவகையை காண வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.கட்டுப்பாடுஅவரது அறிக்கை:தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் அறிக்கையில், 'செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வருவதற்கான
கொரோனாவை கட்டுப்படுத்த பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை-'கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, இறங்குமுகமாக செல்வதற்கான வழிவகையை காண வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

கட்டுப்பாடு

அவரது அறிக்கை:தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் அறிக்கையில், 'செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துஉள்ளன. 'எனவே, நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து கடைகளும், 'ஏசி' வசதி இல்லாது செயல்பட வேண்டும். ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

எனினும், தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாலும், பண்டிகை காலம் என்பதாலும், அனைத்து சில்லறை விற்பனை கடைகள் முன்பும் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. மக்கள் இயல்பு நிலைக்கு சென்றுள்ளனர் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி.அதே சமயத்தில் இறங்குமுகமாக இருந்து கொண்டிருந்த, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, தற்போது ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. செப்., 1ம் தேதி, 1,509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த 23ம் தேதி, 1,745 பேர் பாதிக்கப்பட்டுஉள்ளனர். அதேபோல் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது

.இந்த உயர்வு தொடர்ந்தால், மூன்றாவது அலை ஆரம்பித்து விடுமோ என்ற எண்ணம், மக்கள் இடையே தோன்றி விடும். இந்த எண்ணத்தை போக்க, அனைத்து கடைகளிலும் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு, கடுமையாக்கப்பட வேண்டும்.வழிவகைகடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அதிகம் உள்ள சாலைகளில், அதிக நபர்கள் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இறங்குமுகமாக செல்வதற்கான வழிவகையை காண வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
26-செப்-202100:42:51 IST Report Abuse
J. G. Muthuraj கொரானாவை கட்டுப்படுத்தும் பணி முன்னைவிட வேகமாக நல்லாத்தான போய்கிட்டு இருக்கு......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X