அரசியல் செய்தி

தமிழ்நாடு

60 சதவீதம் பேருக்கு தடுப்பூசி இலக்கை அடைவோம்: மா.சு.,

Updated : செப் 27, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:''தமிழகத்தில் மூன்று கட்ட தடுப்பூசி முகாம்கள் வாயிலாக, 60 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டனர் என்ற நிலையை அடைவோம்,'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் '108' ஆம்புலன்ஸ் சேவை ஆண்டு விழா நடந்தது. கண்காட்சிஅமைச்சர்
 60 சதவீதம் பேருக்கு தடுப்பூசி இலக்கை அடைவோம்: மா.சு.,

சென்னை:''தமிழகத்தில் மூன்று கட்ட தடுப்பூசி முகாம்கள் வாயிலாக, 60 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டனர் என்ற நிலையை அடைவோம்,'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் '108' ஆம்புலன்ஸ் சேவை ஆண்டு விழா நடந்தது.


கண்காட்சி

அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை துவக்கி வைத்தனர். பின், புதிய பயனாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டையை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்.அதன்பின், அவர் அளித்த பேட்டி:

முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள 1.58 கோடி குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இந்த காப்பீடு திட்டத்தில், கறுப்பு பூஞ்சை நோய் சேர்க்கப்பட்டு, 1,850 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் 1,414 பேருக்கு காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படும். தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில், ஒரு கோடியே 17 லட்சத்து 40 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். கூடுதலாக 188 புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் கடந்த இரண்டு தடுப்பூசி முகாம்களில், இலக்கை விட கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல, மாநிலம் முழுதும், 3வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது. இதில், 20 ஆயிரம் மையங்களில், 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மூன்றாவது முகாம்

தமிழக அரசிடம் 29 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே, மூன்றாவது முகாமிலும் அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்படும்.இதன் வாயிலாக 60 சதவீதம் பேர், முதல் தவணை தடுப்பூசி செலுத்தினர் என்ற நிலையை அடைவோம்.இந்த தடுப்பூசி முகாம்களில், மருத்துவ துறை சார்ந்த களப் பணியாளர்கள் கடினமாக உழைக்கின்றனர். எனவே, அவர்களுக்கு நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் தாரேஷ் அகமது, சுகாதார திட்ட இயக்குனர் உமா, மருத்துவ ஊரக சேவை இயக்குனர் குருநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
26-செப்-202112:26:22 IST Report Abuse
duruvasar ஸ்நேக் பாபு சுறுசுறுப்பு மிஸ்ஸிங் சாரே.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
26-செப்-202108:11:56 IST Report Abuse
Duruvesan செங்கபட்டில வூசி தயாரித்து பாதிரி நாட்டை காப்பாற்றி, கொரோனாவை விரட்டிய ஸ்டாலின் வாழ்க.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-செப்-202106:24:52 IST Report Abuse
Kasimani Baskaran 80% இரண்டு தவணையும் தடுப்பூசி போட்ட நாடுகளே திண்டாடும் பொழுது இதுபோல பேசிக்கொண்டே இருப்பது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போலத்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X