பஞ்சாப் 'திரில்' வெற்றி : சுழலில் அசத்திய பிஷ்னாய்

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சார்ஜா:ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் அணி 5 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.எமிரேட்சில் நடக்கும் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடரில் நேற்று பஞ்சாப், ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பீல்டிங் தேர்வு செய்தார்.கெய்ல் 'அவுட்'பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல் (21), மயங்க் அகர்வால் (5)

சார்ஜா:ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் அணி 5 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.எமிரேட்சில் நடக்கும் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடரில் நேற்று பஞ்சாப், ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பீல்டிங் தேர்வு செய்தார்.



latest tamil news





கெய்ல் 'அவுட்'


பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல் (21), மயங்க் அகர்வால் (5) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. மறுபக்கம் ஐதராபாத் பவுலர்களின் பந்துவீச்சு சிறப்பாக அமைய, ரன் சேர்க்க முடியாமல் இருவரும் திணறினர். 10 ஓவரில் பஞ்சாப் அணி 55/2 ரன் எடுத்தது. அபாய வீரர் கெய்ல் (14), ரஷித் கான் சுழலில் சிக்கினார். நிகோலஸ் பூரன் (8), தீபக் ஹூடா (13), நாதன் எல்லிஸ் (12) நிலைக்கவில்லை. பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன் மட்டும் எடுத்தது. ஹர்பிரீத் பிரார் (18) அவுட்டாகாமல் இருந்தார்.


ஹோல்டர் மிரட்டல்


எளிய இலக்கைத் துரத்திய ஐதராபாத் அணிக்கு வார்னர் (2), வில்லியம்சன் (1), மணிஷ் பாண்டே (13) என 'சீனியர்கள்' அதிர்ச்சி கொடுத்தனர். கேதர் ஜாதவ் (12), அப்துல் சமத் (1) நீடிக்கவில்லை. அடுத்து வந்த ஹோல்டர், பிஷ்னாய் பந்தில் சிக்சர் விளாசினார். எல்லிஸ் ஓவரில் 2 சிக்சர் அடித்தார்.


latest tamil news



சகா (31), ரஷித் கான் (3) அவுட்டான போதும், ஹோல்டர் தனி வீரராக போராடினார். ஷமி பந்தில் ஒரு சிக்சர் அடிக்க, கடைசி ஓவரில் ஐதராபாத் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டன. எல்லிஸ் வீசிய இந்த ஓவரில் 11 ரன் மட்டும் எடுக்கப்பட, ஐதராபாத் அணி 20 ஓவரில் 120/7 ரன் மட்டும் எடுத்தது. பஞ்சாப் அணி 5 ரன்னில் 'திரில்' வெற்றி பெற்றது. ஹோல்டர் (47), புவனேஷ்வர் (3) அவுட்டாகாமல் இருந்தனர். சுழலில் அசத்திய பிஷ்னாய் 3 விக்கெட் வீழ்த்தினார். 9 போட்டியில் 1ல் மட்டும் வென்ற ஐதராபாத் அணி, 'பிளே ஆப்' வாய்ப்பை இழந்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghasrin -  ( Posted via: Dinamalar Android App )
26-செப்-202108:30:49 IST Report Abuse
raghasrin அணியின் மென்டார் பதவி விலகவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X