அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஆரம்ப வேகம் அல்ல; எப்போதும் இப்படித்தான்!'

Updated : செப் 27, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை:'பொது மக்களுக்கு கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துஉள்ளார்.அவர் வெளியிட்டு உள்ள வீடியோ பதிவு:சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க., சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களுக்குள், சொன்னவற்றில் பெரும்பாலானவற்றை செய்து விட்டோம். 3 ரூபாய் குறைப்புமே 7ல்
'ஆரம்ப வேகம் அல்ல; எப்போதும் இப்படித்தான்!'

சென்னை:'பொது மக்களுக்கு கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துஉள்ளார்.

அவர் வெளியிட்டு உள்ள வீடியோ பதிவு:சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க., சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களுக்குள், சொன்னவற்றில் பெரும்பாலானவற்றை செய்து விட்டோம்.


3 ரூபாய் குறைப்பு

மே 7ல் பதவியேற்றதும் 2.09 கோடி குடும்பங்களுக்கு 4,000 ரூபாய் கொரோனா நிவாரண நிதியுதவி; ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு; மகளிருக்கு அரசு நகர பஸ்களில் இலவசப் பயணம். மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' துறை; தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவினத்தை, முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் அரசு செலுத்த ஏற்பாடு என ஐந்து முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டேன்.

இதில், முதல் நான்கும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றவை.வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் மற்றும் நகைக் கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலை லிட்டருக்கு3 ரூபாய் குறைப்பு உட்பட, மொத்தம் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல நல்ல செயல்களும் செய்யப்பட்டுள்ளன. இதை ஏதோ ஆரம்ப வேகம் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் இப்படித்தான் இருப்போம்.


வாக்குறுதி

எல்லா நாளும் இப்படித் தான் செயல்படுவோம். இப்போது அறிவித்தது போல, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நானே உங்களிடம் இதை சொல்வேன். நிறைவேற்றிய வாக்குறுதிகளை நானே உங்களுக்கு பட்டியல் போட்டு காண்பிப்பேன்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி: ஸ்டாலின் பாராட்டு



ஐ.ஏ.எஸ்., பணிக்கு, தமிழகத்தில் இருந்து தேர்வானவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.'டுவிட்டர்' பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும், இந்திய குடிமை பணிக்கு, தமிழகத்தில் இருந்து தேர்வாகி உள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள்; சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்.

கோவையை சேர்ந்த மாற்றுத் திறனாளி ரஞ்சித் தேர்வு பெற்றதில், எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. தேர்ச்சி பெறாதோர் துவள வேண்டாம். முயற்சி திருவினையாக்கும் என்று நம்பி உழையுங்கள். வரும் ஆண்டுகளில், தமிழகத்தில் இருந்து தேர்வாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அதற்குண்டான ஆதரவையும், உரிய பயிற்சியையும், அரசு வழங்கும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
iloveindia - Ramanathapuram,இந்தியா
26-செப்-202122:36:40 IST Report Abuse
iloveindia குறை சொல்வோர் சொல்லி கொண்டு தான் இருப்பார். நல்லாட்சி தொடரட்டும்
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
26-செப்-202122:33:58 IST Report Abuse
s t rajan பாவம் தமிழக மக்களாகிய நாம். இப்படிப்பட்ட ஒரு கையாலாகாத ஒரு படு inefficient n inept தில்லு முல்லு கலக (திமுக) அரசியல் வியாதியிடம் மாட்டிக் கொண்டு முழி பிதுங்குகிறோம். ஆனால் அவரோ ஆடம்பரமாக சொகுசு காரில் ஏறி இன்னும் பல வண்டிகளுடன் புடை சூழ, போலீஸ் பந்தோபஸ்தோடும் காலை மதியம் (இருமுறை) மாலை யென்று சொகுசு காரில் அநேக கார்கள் புடைசூழ போலீஸாரின் அபரிமிதமான பாதுகாப்போடு ஹாயாக வலம் வந்து தெருவில் வேறெவரும் நடமாட முடியாதபடி ராஜ வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார், அவ்வப்போது இப்படி பல பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டு.
Rate this:
Cancel
26-செப்-202121:26:12 IST Report Abuse
kulandai kannan ஐயையோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X