அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஆரம்ப வேகம் அல்ல; எப்போதும் இப்படித்தான்!'

Added : செப் 25, 2021
Share
Advertisement
சென்னை-'பொது மக்களுக்கு கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துஉள்ளார்.அவர் வெளியிட்டு உள்ள வீடியோ பதிவு:சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க., சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களுக்குள், சொன்னவற்றில் பெரும்பாலானவற்றை செய்து விட்டோம். ௩ ரூபாய் குறைப்புமே 7ல் பதவியேற்றதும் 2.09 கோடி

சென்னை-'பொது மக்களுக்கு கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துஉள்ளார்.

அவர் வெளியிட்டு உள்ள வீடியோ பதிவு:சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க., சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களுக்குள், சொன்னவற்றில் பெரும்பாலானவற்றை செய்து விட்டோம். ௩ ரூபாய் குறைப்புமே 7ல் பதவியேற்றதும் 2.09 கோடி குடும்பங்களுக்கு 4,000 ரூபாய் கொரோனா நிவாரண நிதியுதவி; ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு; மகளிருக்கு அரசு நகர பஸ்களில் இலவசப் பயணம். மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' துறை; தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவினத்தை, முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் அரசு செலுத்த ஏற்பாடு என ஐந்து முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டேன்.

இதில், முதல் நான்கும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றவை.வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் மற்றும் நகைக் கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ௩ ரூபாய் குறைப்பு உட்பட, மொத்தம் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல நல்ல செயல்களும் செய்யப்பட்டுள்ளன. இதை ஏதோ ஆரம்ப வேகம் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் இப்படித்தான் இருப்போம். வாக்குறுதிஎல்லா நாளும் இப்படித் தான் செயல்படுவோம்.

இப்போது அறிவித்தது போல, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நானே உங்களிடம் இதை சொல்வேன். நிறைவேற்றிய வாக்குறுதிகளை நானே உங்களுக்கு பட்டியல் போட்டு காண்பிப்பேன்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X