தமிழ்நாடு

ஆயுதப்படை மைதானத்தில் : எஸ்.பி., பிரவீன் உமேஷ்டோங்ரே தகவல்

Added : செப் 25, 2021
Share
Advertisement
தேனி, மதுவிலக்கு குற்றச் செயல்களில் பறிமுதல் செய்த 65 டூவீலர்கள், 2 ஆட்டோக்களை தேனி ஆயுதப்படை மைதானத்தில் அக்., 6ல் பொது ஏலத்தில் விட உள்ளதாக தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்ரே தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: '' ஏலத்திற்கு வரும் வாகனங்கள் பொது மக்கள் பார்வைக்காக தேனி, உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை செப்., 26 முதல் அக்., 5 வரை காலை 9.00

தேனி, மதுவிலக்கு குற்றச் செயல்களில் பறிமுதல் செய்த 65 டூவீலர்கள், 2 ஆட்டோக்களை தேனி ஆயுதப்படை மைதானத்தில் அக்., 6ல் பொது ஏலத்தில் விட உள்ளதாக தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்ரே தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: '' ஏலத்திற்கு வரும் வாகனங்கள் பொது மக்கள் பார்வைக்காக தேனி, உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை செப்., 26 முதல் அக்., 5 வரை காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை பார்வையிடலாம். ஏலத்தில் பங்கேற்பவர்கள் தலா ஒரு டூவீலருக்கு ரூ.5 ஆயிரம், ஒரு ஆட்டோவுக்கு ரூ.8 ஆயிரம் முன்பணமாக அக்., 5 மதியம் 2.00 மணிக்குள் ஏ.டி.எஸ்.பி., அலுவலகத்தில் செலுத்த வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகை, சரக்கு மற்றும் சேவை வரி முழுவதும் செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் (தேனி) 04546 250 024, (உத்தமபாளையம்) 04554 - 266 230 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்''. என்றார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X