எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பழைய பவுடரில் பால்; புதிய பாலில் பவுடர்!

Updated : செப் 26, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை-காலாவதியாகும் நிலையில் உள்ள பவுடரை பயன்படுத்தி, ஆவின் பால் பாக்கெட்டுகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதால், அவை விரைவில் கெட்டுப் போவதாக புகார் எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுதும் உள்ள 10 ஆயிரத்து 200 கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, நாள்தோறும் 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்
பழைய பவுடரில் பால்; புதிய பாலில் பவுடர்!

சென்னை-காலாவதியாகும் நிலையில் உள்ள பவுடரை பயன்படுத்தி, ஆவின் பால் பாக்கெட்டுகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதால், அவை விரைவில் கெட்டுப் போவதாக புகார் எழுந்துள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுதும் உள்ள 10 ஆயிரத்து 200 கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, நாள்தோறும் 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது, ஆவின் நிறுவனம் வாயிலாக பலவகை பாலாகவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாகவும் விற்பனை செய்யப்படுகிறது.காலாவதியாகும் நிலைமாநிலம் முழுதும் நாள்தோறும் 26 லட்சம் லிட்டர் பால் விற்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 13 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ளவை பால் பவுடர் மற்றும் வெண்ணெயாக மாற்றப்படுகின்றன.

விற்பனையை விட கொள்முதல் அதிகரித்துள்ளதால், ஆவினில் 16 ஆயிரம் டன் வரை பால் பவுடரும், 5,500 டன்களுக்கு மேல் வெண்ணெயும் தேக்கம் அடைந்துள்ளன.வெளிச்சந்தையில் விலை குறைவாக உள்ளதால், இவற்றை தீபாவளி பண்டிகை நேரத்தில், லாபத்தில் விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.அதேநேரத்தில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கையிருப்பில் உள்ள 765 டன் பால் பவுடர் காலாவதியாக உள்ளது.

அடுத்தாண்டு ஜனவரியில் 798 டன் பால் பவுடர் காலாவதியாக உள்ளது. இதேபோல, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 588 டன் வெண்ணெய் காலாவதியாகும் நிலை உள்ளது.நுகர்வோர் அதிர்ச்சிஅடுத்தாண்டு ஜனவரியில் 261 டன் வெண்ணெய் காலாவதியாகி விடும். இதனால், காத்திருந்து லாபத்தில் விற்பனை செய்ய நினைத்த, ஆவின் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்படும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, புதிதாக கொள்முதல் செய்யப்படும் பால் பெருமளவில் பவுடர் மற்றும் வெண்ணெயாக மாற்றப்படுகிறது. கையிருப்பில் காலாவதியாகும் நிலையில் உள்ள பால் பவுடர், பால் பாக்கெட் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு நாள்தோறும் 12 டன் பால் பவுடரும், பால் பாக்கெட்டுகளாக தயாரிக்கப்படுகின்றன. இருப்பில் உள்ள 15 - 20 டன் வெண்ணெய் விற்பனைக்கு வினியோகிக்கப்படுகிறது.சோழிங்கநல்லுார், மாதவரம், அம்பத்துார் பால் பண்ணைகளின் தேவைக்காக, சென்னை குடிநீர் வாரியத்திடம் இருந்து நாள்தோறும் 36 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வாங்கப்படுகிறது.

காலாவதியாகும் நிலையில் உள்ள பால் பவுடரை பாலாக மாற்றுவதால், அது விரைவில் கெட்டு விடுவதாக புகார் எழுந்துள்ளது.ஆவின் நிறுவனத்தின் பால் விரைவில் கெடுவதாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வை, ஆவின் நிறுவன தரக் கட்டுப்பாட்டு பிரிவினர், 10 ஆயிரத்து 299 இடங்களில் மேற்கொண்டுள்ளனர்.

இது, நுகர்வோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, நாள்தோறும் கொள்முதல் செய்யப்படும் பாலை, உரிய முறையில் குளிரூட்டி, பதப்படுத்தி, நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். தேக்கம் அடைந்துள்ள பால் பவுடரை விற்பனை செய்ய, மாற்று வழிகளை கையாள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.'பேச்சுக்கே இடமில்லை!'ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி கூறியதாவது:மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆய்வு, 2019 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அப்போது பாலின் தரத்தை மேம்படுத்த, 210 மொத்த பால் குளிர்விப்பான்கள், 500க்கும் மேற்பட்ட பால் தர ஆய்வு கருவிகள், மத்திய - மாநில அரசுகளால் வழங்கப்பட்டன. இவற்றை உரிய நேரத்தில் பயன்படுத்தவில்லை. இதனால், நவீன சாதனங்களை பயன்படுத்தாமலே, ஆவின் நிறுவனத்தால் பாலின் தரத்தை பாதுகாக்க முடிகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்போது தான், அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

தற்போது, பாலின் தரத்தை பாதுகாப்பதற்கு பல்வேறு நவீன கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆவின் பால் பவுடர் ஒன்றரை ஆண்டுகள் வரை தாக்கு பிடிக்கும். ஆனால், ஓராண்டில் காலாவதி செய்யப்படுகிறது. பத்து மாதங்களை கடந்த பால் பவுடரை, பால் உற்பத்திக்கு பயன்படுத்துவதில்லை. எனவே, இப்போது பால் கெடுகிறது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
27-செப்-202113:58:51 IST Report Abuse
raja சர்க்காரியா சொன்ன விஞ்ஞானம் மீட்டும் திரும்புது....
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-செப்-202121:18:29 IST Report Abuse
RajanRajan ஓ, அப்போ பால் பொருட்களில் மேட் இன் தமிழ்நாடுன்னு ஸ்டிக்கர் ஒட்டி வித்து போடுவானுங்களே. கழிசடைகளா, நெய் வெண்ணெய்களை விலை குறைப்பு செய்து விற்று நஷ்டம் தவிர் நூதன திராவிடனே. அண்ணே வெண்ணெய் ஏன் விற்காமல் போச்சு ...
Rate this:
raja - Cotonou,பெனின்
27-செப்-202114:24:30 IST Report Abuse
rajaஅப்படி இல்லீங்க... சர்க்காரியா விஞ்ஞானம் என்ன சொல்லுதுன்னா... காலாவதி ஆனதா கணக்கு காட்டிவிட்டு ...அதை இந்த மாதிரி (ஏ)மாத்தி வித்து கணக்கில் வராம கொள்ளை அடிக்கிறதுன்னு சொல்லுது.......
Rate this:
Cancel
PalaniKuppuswamy - sanjose,இந்தியா
26-செப்-202118:14:54 IST Report Abuse
PalaniKuppuswamy தலைகீழ் தருதலைகள் ...தலைவரானால்...இப்படித்தான் எல்லாம் தலைகீழாக சீரழியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X