பொது செய்தி

தமிழ்நாடு

மாலை நேர மது விருந்து

Added : செப் 25, 2021
Share
Advertisement
உள்ளாட்சி தேர்தல் என்றாலே, 'குடி'மகன்களுக்கு உள்ளூர் திருவிழாவை போன்றது. 'டாஸ்மாக்' பக்கம் போகாமலே வீட்டை தேடி சரக்கு வருவது, அவர்களுக்கு இனிக்கத்தானே செய்யும்.கடந்த உள்ளாட்சி தேர்தல்களில், ஊராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் மட்டுமே மது விருந்து கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.ஆனால் தற்போது, ஊராட்சிகளில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிடும்

உள்ளாட்சி தேர்தல் என்றாலே, 'குடி'மகன்களுக்கு உள்ளூர் திருவிழாவை போன்றது. 'டாஸ்மாக்' பக்கம் போகாமலே வீட்டை தேடி சரக்கு வருவது, அவர்களுக்கு இனிக்கத்தானே செய்யும்.

கடந்த உள்ளாட்சி தேர்தல்களில், ஊராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் மட்டுமே மது விருந்து கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.ஆனால் தற்போது, ஊராட்சிகளில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிடும் வேட்பாளர்களும்கூட மது பாட்டில்கள் கொடுத்து, வாக்காளர்களை கவர்கின்றனர்.அரசியல் கட்சி சார்ந்த மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களும், தன் கட்சி நிர்வாகிகள் மூலம், ஆண் வாக்காளர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று 'குவார்ட்டர் பாட்டில்'களை ப்ரியமாக கொடுத்து, அவர்களை கைக்குள் வைக்கின்றனர்.தவிர தொழிற்சாலைகளுக்கும், வெளியூர்களுக்கும் வேலைக்கு செல்வோரை மாலை நேரத்தில் சந்தித்து, மது விருந்துக்கும் ஏற்பாடு செய்கின்றனர்.

மாலை நேர மயக்கத்தில் ஆழ்த்தும் வரை மது விருந்தை ஜோராக நடத்துகின்றனர்.சில பகுதிகளில், ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் வீட்டுக்கு பின்புறம், யார் சென்றாலும் மது அருந்தி விட்டு செல்லலாம் என்ற நிலையையும் உருவாக்கியுள்ளனர். அதிலும் ஒரு கணக்கு வைத்துள்ளனர். அதாவது தன்னிடம் வந்து யார் உரிமையோடு மது வாங்கி செல்கின்றனரோ, அந்த 'குடி'மகனின் ஓட்டு உறுதி என்பதை குறித்து கொள்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X