மீண்டும் கட்சி தாவுகிறாரா பழ.கருப்பையா?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீண்டும் கட்சி தாவுகிறாரா பழ.கருப்பையா?

Added : செப் 25, 2021 | கருத்துகள் (2)
Share
சென்னை-கமல் கட்சியின் அரசியல் ஆலோசகராக உள்ள, 'மாஜி' எம்.எல்.ஏ., பழ.கருப்பையா, விரைவில் தி.மு.க.,வில் சேர இருப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.காங்கிரஸ், ம.தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளில் பணியாற்றிய முன்னாள் எம்.எல்.ஏ., பழ.கருப்பையா, தற்போது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் அரசியல் ஆலோசகராக உள்ளார். சட்டசபை தேர்தலில் தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு

சென்னை-கமல் கட்சியின் அரசியல் ஆலோசகராக உள்ள, 'மாஜி' எம்.எல்.ஏ., பழ.கருப்பையா, விரைவில் தி.மு.க.,வில் சேர இருப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

காங்கிரஸ், ம.தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளில் பணியாற்றிய முன்னாள் எம்.எல்.ஏ., பழ.கருப்பையா, தற்போது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் அரசியல் ஆலோசகராக உள்ளார். சட்டசபை தேர்தலில் தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத்திற்காக பிரசாரம் செய்வார் என, எதிர்பார்க்கப்பட்ட பழ.கருப்பையா, தி.மு.க.,வில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது.இதை அவர் மறுத்துள்ளார்.

'கட்சி தாவ இருப்பதாக வெளியான தகவல் வதந்தி' என்றார்.இது குறித்து, மய்ய நிர்வாகிகள் கூறியதாவது:தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பழ.கருப்பையா, ஒரு சில கருத்துகளை வெளிப்படையாக கூறியிருந்தார். அதை அடிப்படையாக வைத்து, அவர் தி.மு.க.,வில் இணைய இருப்பதாக வதந்தி பரவியுள்ளது.இன்னும் மக்கள் நீதி மய்யத்தில் தான் உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிரசாரத்திற்கு ரூ.15 லட்சமாம்!உள்ளாட்சி தேர்தலில் 97 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில், கமல் கட்சி சார்பில் 1,000த்திற்கும் குறைவாகவே மனு அளித்துள்ளனர். தென்காசி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் போட்டியிட ஆட்களே இல்லை. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் மட்டும், மக்கள் நீதி மய்யத்தினர் கணிசமாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில், கமல் பிரசாரத்திற்கு வர வேண்டுமானால் 15 லட்சம் ரூபாய் செலவாகும் என, வேட்பாளர்களிடம் நிர்வாகிகள் சிலர் கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X