தமிழ்நாடு

குமுளி வரை சென்று திரும்பும் அரசு, தனியார் பஸ்களிலும் கிருமி நாசினி,புகை மருந்து தெளிக்கும் நடவடிக்கை தீவிரம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
தமிழக -- கேரள எல்லையான குமுளி வழியாக இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலத் தோட்டங்களுக்கு தமிழக விவசாயிகள், தொழிலாளர்கள் தினமும் அதிகம் சென்று வருகின்றனர்.பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனப் போக்குவரத்தும் இவ்வழியாக அதிகம். இடுக்கி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவதும், பின் அதிகரிப்பதுமாக உள்ளது. தினந்தோறும் 500 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில்

தமிழக -- கேரள எல்லையான குமுளி வழியாக இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலத் தோட்டங்களுக்கு தமிழக விவசாயிகள், தொழிலாளர்கள் தினமும் அதிகம் சென்று வருகின்றனர்.பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனப் போக்குவரத்தும் இவ்வழியாக அதிகம். இடுக்கி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவதும், பின் அதிகரிப்பதுமாக உள்ளது. தினந்தோறும் 500 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சராசரியாக 1000 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். நேற்றுமுன்தினம் இடுக்கி மாவட்டத்தில் 925 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதுதவிர கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில் கூடலூர் நகராட்சி கமிஷனர் சேகர், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் குமுளி எல்லையில் பார்வையிட்டு கேரளாவில் இருந்து தமிழகப்பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களிலும், குமுளி வரை சென்று திரும்பும் அரசு, தனியார் பஸ்களிலும் கிருமி நாசினி,புகை மருந்து தெளிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் தமிழகப் பகுதிக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி கண்காணித்தும் வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X