வராகநதி ஆக்கிரமிப்புகளால் கண்மாய் நீர் ஆதாரம் பாதிப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி, ;மேல்மங்கலத்தில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் வராகநதிஓடையாக மாறி, கண்மாய்களின் நீர் ஆதாரம் குறைந்துள்ளது.கொடைக்கானல் மலைப்பகுதி, சோத்துப்பாறை நீர் பிடிப்பில் பெய்யும் மழையால்வராகநதிக்கு நீர் வரத்து வரும். பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், சிந்துவம்பட்டி,கோவில்புரம் வழியாக 37 கி.மீ., பயணித்து வைகை ஆற்றில் கலக்கிறது. வராகநதி நீரினால்

தேவதானப்பட்டி, ;மேல்மங்கலத்தில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் வராகநதிஓடையாக மாறி, கண்மாய்களின் நீர் ஆதாரம் குறைந்துள்ளது.கொடைக்கானல் மலைப்பகுதி, சோத்துப்பாறை நீர் பிடிப்பில் பெய்யும் மழையால்வராகநதிக்கு நீர் வரத்து வரும். பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், சிந்துவம்பட்டி,கோவில்புரம் வழியாக 37 கி.மீ., பயணித்து வைகை ஆற்றில் கலக்கிறது. வராகநதி நீரினால் நாரணன் கண்மாய், பெரியகண்மாய், சிறுகுளம்,நெடுங்குளம், புதுக்குளம், ஓட்டக்குளம், வேட்டுவன்குளம் கண்மாய்களுக்கு நீர் ஆதாரமாகும். இதன் மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் ஏக்கரில் நெல்சாகுபடியாகும். தற்போது நீர் வரத்து குறைவால் பாதிப்புக்குள்ளாகிறது.ஆக்கிரமிப்பு:ஆற்றின் கரையோரங்களில் நிலம் உள்ள விவசாயிகள் கரைகளை ஆக்கிரமித்து நீண்ட கால பலன்தரக்கூடிய மரங்களை வளர்க்கின்றனர். வராகநதி அகலம் குறைந்து பலஇடங்கள் ஓடையாக மாறி வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X