பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளுக்கு சென்று மாத்திரை வழங்க தன்னார்வலர்கள் நியமனம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
கம்பம் : மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் நோயாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று மாத்திரை வழங்கும் திட்டத்திற்கு சுகாதார தன்னார்வலர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களுக்கு மாத்திரைகள் மொத்தமாக வழங்கப்படும். நோயாளிகள் மாதம் ஒரு நாள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஒரு

கம்பம் : மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் நோயாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று மாத்திரை வழங்கும் திட்டத்திற்கு சுகாதார தன்னார்வலர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களுக்கு மாத்திரைகள் மொத்தமாக வழங்கப்படும். நோயாளிகள் மாதம் ஒரு நாள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஒரு மாதத்திற்கு தேவையான மாத்திரைகளை பெற்று செல்வது வழக்கம். தற்போது தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் கிராமங்களில் கிராம சுகாதார தன்னார்வலர்கள்' நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாத்திரைகளை பெற்று, நோயாளி வீடுகளுக்கே சென்று வழங்குவர். கிராம சுகாதார தன்னார்வலர்கள், சம்பந்தப்பட்ட கிராம சுகாதார செவிலியர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர். கிராம சுகாதார தன்னார்வலர்களை நியமிக்கும் பணி துவங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X