கூடலூரில் குடிநீர் காய்ச்சி குடிக்க வேண்டுகோள் | Dinamalar

கூடலூரில் குடிநீர் காய்ச்சி குடிக்க வேண்டுகோள்

Added : செப் 25, 2021
Share
கூடலுார் :கூடலூரில் கலங்கிய நிலையில் குடிநீர் வினியோகிப்பதால் காய்ச்சி குடிக்க நகராட்சி கமிஷனர் சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் கூறியதாவது, ' லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து கூடலூருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மேல்நிலைத் தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு வரும் மெயின் குழாய் அடிக்கடி உடைந்து வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால்

கூடலுார் :கூடலூரில் கலங்கிய நிலையில் குடிநீர் வினியோகிப்பதால் காய்ச்சி குடிக்க நகராட்சி கமிஷனர் சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் கூறியதாவது, ' லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து கூடலூருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மேல்நிலைத் தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு வரும் மெயின் குழாய் அடிக்கடி உடைந்து வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்பில் இருந்து கூடலூர் வரை உள்ள 9 கி.மீ., தூரத்திற்கு புதிய குழாய் பதிக்கும் பணி முடிவடைந்தது. 2 நாட்களாக இக்குழாயுடன் மேல்நிலை தொட்டிக்கு செல்லும் குழாயில் இணைக்கும் பணி நடக்கிறது.தற்போது வினியோகிக்கும் குடிநீர் கலங்கிய நிலையில் உள்ளது. இதனை காய்ச்சி குடிக்க வேண்டும்', என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X