பொது செய்தி

தமிழ்நாடு

கைரேகை பதிவு ஆகாததால் ரேஷன் வாங்குவதில் சிரமம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
சென்னை-ரேஷன் கடைகளில் உள்ள கருவியில், கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்யும் பணி நேற்று முடங்கியதால், பலரும் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.தமிழக ரேஷன் கடைகளில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் தவிர்த்து, மற்ற அனைத்து கார்டுதாரர்களுக்கும், கார்டில் உள்ள குடும்பத் தலைவர் அல்லது உறுப்பினர்களின் கைரேகையை பதிவு செய்து, அத்தியாவசிய
 கைரேகை பதிவு ஆகாததால்  ரேஷன் வாங்குவதில் சிரமம்

சென்னை-ரேஷன் கடைகளில் உள்ள கருவியில், கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்யும் பணி நேற்று முடங்கியதால், பலரும் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தமிழக ரேஷன் கடைகளில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் தவிர்த்து, மற்ற அனைத்து கார்டுதாரர்களுக்கும், கார்டில் உள்ள குடும்பத் தலைவர் அல்லது உறுப்பினர்களின் கைரேகையை பதிவு செய்து, அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.இதற்காக, அனைத்து கடைகளுக்கும் கைரேகை பதிவுடன் கூடிய, 'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும் விற்பனை முனைய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. காத்திருக்கவும்கைரேகையை பதிவு செய்ததும், கார்டுக்கு உரியவர் தானா என்பது, 'ஆதார்' எண், 'சர்வரில்' இருந்து உடனுக்குடன் ஒப்புதல் அளிக்கப்படும். பின், பொருட்கள் வழங்கப்படும்.ஆனால் நேற்று காலை முதல், மதியம் வரை கார்டுதாரர்கள் கைரேகையை பதிவு செய்ததும், அதற்கு ஒப்புதல் தரும் சர்வர் இயங்கவில்லை. கடை ஊழியர்கள், கார்டுதாரர்களை மாற்றி மாற்றி கைரேகை பதிவு கருவியில் பதிவு செய்தும், 'தயவு செய்து காத்திருக்கவும்' என்ற தகவலே வந்தபடி இருந்தது. இதனால், ஊழியர்கள் பொருட்கள் வழங்காததால், கார்டுதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.'இ - சேவை' மைய பணிகள் பாதிப்பு!'ஆதார்' பதிவு இணையதளத்தில் ஏற்பட்ட பாதிப்பால், ஆதார் எண்ணை பின்பற்றி வழங்கப்படும், 'பான் கார்டு' பதிவு, திருத்தம், 'இ - ஷ்ரம்' எனப்படும் தொழிலாளர் நல வாரிய பதிவு என, பல சேவைகள் ஒரு வாரமாக முடங்கியுள்ளன.

இது குறித்து, மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையத்தினர் கூறியதாவது:ஆதாரில் திருத்தம் செய்வதை எளிதாக்க, பொது சேவை மையம் வாயிலாகவும் மக்களுக்கு சேவை வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு வாரத்திற்கு மேலாக, சர்வரின் தாமதமான செயல்பாட்டால் எந்த சேவையும் வழங்க முடியவில்லை.

குறிப்பாக, தொழிலாளர் நல வாரிய பதிவை மேற்கொள்ள முடியவில்லை. இப்பணியை டிசம்பருக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆதார் சர்வர் செயல்படாததால், அப்பணியை குறித்த காலத்தில் முடிக்க வாய்ப்பில்லை. சில இடங்களில் அதிகாலை 4:00 முதல் 8:00 மணி வரையிலும், இரவு 9:00 மணிக்கு பின்னரும் ஆதாரை பின்பற்றி வழங்கும் சேவையை செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X