பொது செய்தி

தமிழ்நாடு

கனவு ஓவியத்தால்... கற்கள் பேசுகின்றன!

Updated : செப் 26, 2021 | Added : செப் 25, 2021
Share
Advertisement
கனவு காணுங்கள்... துாக்கத்தில் வருவதல்ல கனவு. உன்னை துாங்க விடாமல் செய்வது எதுவோ, அதுவே லட்சிய கனவு என்கிறார் அப்துல்கலாம்.இலக்கை நோக்கி நகர்வதற்கு, கனவுகள் உந்து சக்தியாக உள்ளன. கனவுகளின் மகத்துவத்தை அனைவரையும் உணர செய்யும் வகையில், ஆண்டுதோறும் செப்., 25ம் தேதி, உலக கனவு தினமாக கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு, திருப்பூர் நிப்ட்--டீ கல்லுாரி மாணவர்கள், முற்றிலும்
 கனவு ஓவியத்தால்... கற்கள் பேசுகின்றன!

கனவு காணுங்கள்... துாக்கத்தில் வருவதல்ல கனவு. உன்னை துாங்க விடாமல் செய்வது எதுவோ, அதுவே லட்சிய கனவு என்கிறார் அப்துல்கலாம்.இலக்கை நோக்கி நகர்வதற்கு, கனவுகள் உந்து சக்தியாக உள்ளன. கனவுகளின் மகத்துவத்தை அனைவரையும் உணர செய்யும் வகையில், ஆண்டுதோறும் செப்., 25ம் தேதி, உலக கனவு தினமாக கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு, திருப்பூர் நிப்ட்--டீ கல்லுாரி மாணவர்கள், முற்றிலும் புதுமையாக, கனவுகளை சுமக்கும் கல் ஓவியம் தீட்டி அசத்தியுள்ளனர்.இரண்டாம் ஆண்டு அப்பேரல் பேஷன் டிசைன் மாணவ, மாணவியர் 50 பேர் இணைந்து, நான்கு பெரிய பாறாங்கற்களில், தங்கள் கனவுகளை அழகிய வண்ணங்களை குழைத்து, ஓவியமாக வரைந்துள்ளனர்.

மாணவர்களின் கைவண்ணத்தில், கற்கள் ஒவ்வொன்றும், கனவுகளை பேசும் உயிர் ஓவியமாக மாறியுள்ளன.நிப்ட்--டீ கல்லுாரி முதன்மை டிசைனர் பூபதி விஜய் கூறியதாவது:கனவு தினத்தை முன்னிட்டு, மாணவ, மாணவியர் இணைந்து, கற்களில் ஓவியம் தீட்டி உள்ளனர். பாறாங்கற்களை தேர்ந்தெடுத்து எடுத்துவந்து, துாய்மை செய்து, அவற்றின்மேல், ஓவியம் வரைந்துள்ளனர்.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கனவுகள் வரும்; சில கனவுகளை புரிந்து கொள்ள முடியாது. சில கனவுகள் பாதி புரியும்; பாதி புரியாது. இந்த தத்துவத்தை அடிப்படையாக கொண்டு, கற்களின் மீது, கோடை, குளிர், இளவேனில், வசந்த காலத்தை சித்தரிக்கும் வகையிலான காட்சிகள்.இல்யூஷன் எனப்படும் புரியாத புதிர். பிறர் விளக்கினால் மட்டுமே பொருள்புரியும் தன்மை கொண்ட அப்ஸ்ட்ராக்ட் பெயின்டிங், மனித முகம், அழகிய கண், பிரபல ஓவியர் பிக்காசோவின் க்யூபிஷம் எனப்படும் முப்பரிமாண ஓவியங்களை தீட்டியுள்ளனர்.

கனவுகளை சுமக்கும் இந்த ஓவிய கற்களை, அமரும் வகையில், இருக்கைகள் போன்று வடிவமைத்து, கல்லுாரி வளாகத்தில் வைத்துள்ளோம். வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும், லட்சிய கனவுகள்போன்று, இந்த கற்கள், பளபளத்துக்கொண்டே இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X