ரவுடிகள் வேட்டை தொடருது ஒரே நாளில் 83 பேர் சிக்கினர்

Added : செப் 25, 2021 | |
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில், 70 ரவுடிகள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில், 70 ரவுடிகள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த, 33 பேர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளன. இதில் 384 ரவுடிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடாமல் இருப்பது தெரிந்தது. எனினும் அவர்களை பிடித்து, குற்றங்களில் ஈடுபடமாட்டோம் என எழுதி வாங்கப்பட்டு உள்ளது. முக்கியமாக 13 ரவுடிகளை கைது செய்து, இரண்டு கத்தி, ஏழு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் 250 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.ரவுடிகளை பிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். அரசியல் தொடர்புடைய ரவுடிகள், சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்கு தப்பியோடிவிட்டனர்.இத்தகவலை, செங்கல்பட்டு எஸ்.பி., விஜயகுமார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X