பொது செய்தி

தமிழ்நாடு

மின்னணுக்கழிவுகள்

Added : செப் 25, 2021
Share
Advertisement
ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குக்கு தடை விதித்தாலும், தடை குறித்து கவலைப்படாமல், இவற்றை வீதிகளில் வீசியெறியும் நிலை இருக்கிறது. கொரோனா பரவலுக்குப் பின், சிறிதளவு நீடித்துவந்த கட்டுப்பாடுகளும் முழுமையாக காணாமல் போனது. திருப்பூரில், பல்வேறு பகுதிகளும், பாலிதீன் காடுகளாக மாறியிருக்கின்றன.இதைப்போன்றே தற்போது மின்னணுக்கழிவுகளும், ஆபத்தாக

ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குக்கு தடை விதித்தாலும், தடை குறித்து கவலைப்படாமல், இவற்றை வீதிகளில் வீசியெறியும் நிலை இருக்கிறது. கொரோனா பரவலுக்குப் பின், சிறிதளவு நீடித்துவந்த கட்டுப்பாடுகளும் முழுமையாக காணாமல் போனது. திருப்பூரில், பல்வேறு பகுதிகளும், பாலிதீன் காடுகளாக மாறியிருக்கின்றன.இதைப்போன்றே தற்போது மின்னணுக்கழிவுகளும், ஆபத்தாக மாறிக்கொண்டிருக்கின்றன.மொபைல்போன், லேப்டாப், டேப்லெட், 'டிவி' உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பழையவை ஆனதும், துாக்கியெறியும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமான குப்பைக்கழிவுகளுடன் இவையும் கலந்துவிடுகின்றன.பழுதுநீக்கிப் பயன்படுத்துவதைக் காட்டிலும், புதிதாக வாங்கிக்கொள்ளலாம் என்ற எண்ணம் காரணமாகவே, சீக்கிரமே, பயன்படுத்தப்பட்ட சிறிது காலத்திற்குள்ளாகவே மின்னணு சாதனங்கள், குப்பைக் கூடாரங்களுக்கு சென்றுவிடுகின்றன. தொழில் நகரான திருப்பூரில் இத்தகைய மின்னணுக்கழிவுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.இந்தப்பொருட்களும் மண்ணுடன் கலந்து, நிலத்தடி நீரைப் பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக, மின்னணுக்கழிவுகளை அதிகமாக உருவாக்கும் நாடாக நம் தேசம் மாறியிருக்கிறது.கடந்த 2, 3 ஆண்டுகளில், மின்னணுக் கழிவுகளின் அளவு 40 சதவீதத்தைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.எதிர்காலத்தில் மின்னணுக்கழிவுகளை தடுப்பது இயலாத காரியம்; இருப்பினும், கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. மின்னணுக்கழிவுகள் மறுசுழற்சிக்கு ஊக்குவிப்பு தர வேண்டும்.மின்னணுக்கழிவுகளைக் கையாள்வதற்கான சட்டவிதிமுறைகள், இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதன்படி மின்னணுக்கழிவுகளை தயாரிப்பு நிறுவனங்களே சேகரிக்க வழிகோலப்பட்டுள்ளது.மின்னணுக்கழிவுகளைக் கையாள்வது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டால், அது சுற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்.அமெரிக்கா,சீனாவுக்கு அடுத்தபடியாக, மின்னணுக்கழிவுகளை அதிகமாக உருவாக்கும் நாடாக நம் தேசம் மாறியிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X