சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
கூடலுார் :பெரியாறு அணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி கூடலூரில் விவசாய சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பெரியாறு அணையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக நேற்று முன்தினம் திருவனந்தபுரம் போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு மர்ம நபர் அலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை கூடலூரில்

கூடலுார் :பெரியாறு அணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி கூடலூரில் விவசாய சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பெரியாறு அணையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக நேற்று முன்தினம் திருவனந்தபுரம் போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு மர்ம நபர் அலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை கூடலூரில் முல்லைச்சாரல் விவசாய சங்கம், முல்லைப் பெரியாறு பாசனம் மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம், ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கம், இயற்கை வேளாண் விவசாய சங்கம், 18 ம் கால்வாய் விவசாய சங்கம், பெரியாறு அணை மீட்புக்குழுவினர் ஒருங்கிணைந்து பழைய பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரியும், அணையில் மத்திய பாதுகாப்பு படையினரை நியமிக்கக் கோரியும் வலியுறுத்தப்பட்டது. விவசாய சங்கங்களை சேர்ந்த கொடியரசன், சதீஷ்பாபு, ராஜீவ், ரஞ்சித், ராமராஜ், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X