கூடலுார் :பெரியாறு அணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி கூடலூரில் விவசாய சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பெரியாறு அணையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக நேற்று முன்தினம் திருவனந்தபுரம் போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு மர்ம நபர் அலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை கூடலூரில் முல்லைச்சாரல் விவசாய சங்கம், முல்லைப் பெரியாறு பாசனம் மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம், ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கம், இயற்கை வேளாண் விவசாய சங்கம், 18 ம் கால்வாய் விவசாய சங்கம், பெரியாறு அணை மீட்புக்குழுவினர் ஒருங்கிணைந்து பழைய பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரியும், அணையில் மத்திய பாதுகாப்பு படையினரை நியமிக்கக் கோரியும் வலியுறுத்தப்பட்டது. விவசாய சங்கங்களை சேர்ந்த கொடியரசன், சதீஷ்பாபு, ராஜீவ், ரஞ்சித், ராமராஜ், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE