தமிழ்நாடு

மஞ்சளாறில் மரபணு மேம்படுத்திய பண்ணை: திலேப்பியா மீன் குஞ்சு வளர்ப்பு 42 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்க்க இலக்கு

Added : செப் 25, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி, மஞ்சளாறு அணையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வசதி, குளு,குளு சீதோஷ்ண நிலை உள்ளதால் மீன்வளத்துறையின் கெண்டை வளர்ப்பு பண்ணை அமைத்துள்ளது. இதில் பவானி சாகர், மேட்டூர் அணை மீன் உற்பத்தி நிலையங்களில் இருந்து கட்லா, ரோகு, மிருகால் குஞ்சுகள் பெற்று 45 நாட்கள் வளர்த்து விரலிகளாக விற்க உள்ளனர். இந்தாண்டில் 27 லட்சம் விரலிகள் விற்க இலக்கு நிர்ணயித்து வளர்ப்பில்

தேவதானப்பட்டி, மஞ்சளாறு அணையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வசதி, குளு,குளு சீதோஷ்ண நிலை உள்ளதால் மீன்வளத்துறையின் கெண்டை வளர்ப்பு பண்ணை அமைத்துள்ளது. இதில் பவானி சாகர், மேட்டூர் அணை மீன் உற்பத்தி நிலையங்களில் இருந்து கட்லா, ரோகு, மிருகால் குஞ்சுகள் பெற்று 45 நாட்கள் வளர்த்து விரலிகளாக விற்க உள்ளனர். இந்தாண்டில் 27 லட்சம் விரலிகள் விற்க இலக்கு நிர்ணயித்து வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.நீர்வள நிலவள திட்டத்தில் ரூ.3.20 கோடியில் மரபணு மேம்படுத்தப்பட்ட பண்ணை திலேப்பியா மீன் குஞ்சு பொரிப்பகம் அமைத்துள்ளனர். இதற்கு ஆந்திரா, விஜயவாடா ராஜிவ்காந்தி நீர் வாழ், உயிரின வளர்ப்பு மையத்தில் ஆண், பெண் மீன் குஞ்சுகள் பெற்று அதனை பிரித்து வளர தண்ணீரில் மிதவை கூண்டு அமைத்துள்ளனர். 3 மாதம் வளர்க்கப்படும் மீன் குஞ்சுகள், 100 கிராம் அளவில் பெரிதானவுடன் இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிடும்.இனப்பெருக்க சுவாரஸ்யம்தண்ணீரில் இனப்பெருக்கத்திற்கு 8 மிதவை கூண்டுகள் உள்ளன. ஒரு ஆண் மீனிற்கு, 2 பெண் மீன் வீதம் நுாற்றுக்கும் மேற்பட்ட மீன்கள் மிதவை கூண்டில் விடப்படும். இவை ஒன்றொடு ஒன்று உரசி இனப்பெருக்கம் செய்யும். ஆண் மீன்கள், பெண் மீன்களை காயப்படுத்தாமல் இருக்க, கூண்டுக்குள் விடும் முன் ஆண் மீன் வாய் பகுதி 'மவுத் கட்டிங்'செய்து 'ஜிஞ்சர்' மருந்து தடவி இனப்பெருக்கம் கூண்டிற்குள் விடப்படும். இதனால் ஆண் மீன், பெண் மீன்களை கடிக்காமல் இனப்பெருக்கத்தில் ஆர்வம் காட்டும்.முட்டை தயார்இனப்பெருக்கம் கூண்டில் 15 முதல் 20 நாட்களுக்கு பிறகு பெண் மீன்களை பிரித்து அதன் வயிற்றில் உள்ள முட்டைகளை வாய் வழியாக சேகரிக்கப்படும். முட்டை நவீன தொழில்நுட்பத்தில் பொரிப்பகம் மூலம் அதிகளவு நுண்மீன் குஞ்சுகளாக உருவெடுக்கும். 3 நாட்கள் உணவு எடுக்காமல், நீரையே உணவாக எடுத்துக்கொள்ளும். 4 வது நாளிலிருந்து ஹார்மோன் கலந்த மாவு தீவனம் கொடுப்பதால் மரபணு மேம்படுத்திய ஒன்னறை இன்ச் ஆண் மீன் குஞ்சுகளாகி விற்பனைக்கு தயாராகிறது. இந்த ஆண்டு 15 லட்சம் மரபணு மேம்படுத்தப்பட்ட குஞ்சுகள் வளர்க்க திட்டமிட்டுள்ளனர். குளங்கள், குட்டைகளில் வழக்கமாக வளரும் கெண்டை, கெழுத்தி குஞ்சுகள் எடை அதிகரிக்க 9 மாதமாகும். மரபணு மேப்படுத்திய மீன் குஞ்சுகள் 4 மாதங்களில் அரைகிலோ வளர்ச்சி பெறும். எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் மீன்களை நோய் எளிதில் தாக்காது. இறப்பு விகிதம் மிகக்குறைவு. அறுவடையில் வலையிலும், கையிலும் எளிதில் சிக்கும்.உணவில் ருசியாக இருக்கும். இதனால் இக் குஞ்சுக்கு நல்ல கிராக்கி உள்ளது. மீன் உற்பத்தி பணிகளை மண்டல துணை இயக்குனர் பிரபாவதி, உதவி இயக்குனர் பஞ்சராஜா,ஆய்வாளர் அண்ணாத்துரை கண்காணித்து வருகின்றனர். 2022 ஜன., மீன்குஞ்சு விற்பனை துவங்க உள்ளது என அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X