பொது செய்தி

இந்தியா

விவசாய சங்கங்கள் வரும் 27ல் 'பாரத் பந்த்'

Added : செப் 25, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''மத்திய விவசாய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய சங்கங்கள், வரும் 27ல் 'பாரத் பந்த்' நடத்தப்படவுள்ளது. இம்முறை தீவிரமாக பந்த் நடத்தப்படும்,'' என விவசாய தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தெரிவித்தார். பெங்களூரில், விவசாய தலைவர்களுடன், கோடிஹள்ளி நேற்று ஆலோசனை நடத்தினார். பின் அவர் கூறியதாவது:மத்திய அரசின் விவசாய சட்டத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்து,

பெங்களூரு : ''மத்திய விவசாய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய சங்கங்கள், வரும் 27ல் 'பாரத் பந்த்' நடத்தப்படவுள்ளது.

இம்முறை தீவிரமாக பந்த் நடத்தப்படும்,'' என விவசாய தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தெரிவித்தார். பெங்களூரில், விவசாய தலைவர்களுடன், கோடிஹள்ளி நேற்று ஆலோசனை நடத்தினார். பின் அவர் கூறியதாவது:மத்திய அரசின் விவசாய சட்டத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்து, செப்டம்பர் 27ல் நடத்தும், 'பாரத் பந்த்' துக்கு, சம்யுக்த கிசான் மோர்ச்சா, கரும்பு விவசாயிகள் சங்கம், விவசாய சங்கம் உட்பட, அனைத்து விவசாய சங்கங்கள் ஆதரவளித்துள்ளன.

மற்ற சங்கங்களும் ஆதரவளிக்க வேண்டும். விவசாயிகளே இப்போராட்டத்தில், முன்னணியில் இருப்பர். இம்முறை தீவிரமாக பந்த் நடத்தப்படும். அரசுக்கு ஆதரவாக இருப்போர் மட்டும், பந்த்துக்கு எதிர்ப்பாக உள்ளனர். நாங்கள் அரசியல் கட்சிகளின் ஆதரவு கேட்கவில்லை. இது விவசாயிகளின் போராட்டம். மத்திய அரசு அனைத்தையும் தனியார் மயமாக்குகிறது. துறைமுகம், ரயில்வே, நெடுஞ்சாலை என அனைத்தையும் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கிறது. இது இப்படியே நீடித்தால் விவசாயிகளையும் தனியார் மயமாக்குவர். இதை எதிர்க்கும் நோக்கில், பந்த் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X