எப்ப சார் சீரமைப்பிங்க! ஆண்டுக்கணக்கில் சிதைந்து கிடக்கும் கோயில் குளங்கள்

Added : செப் 25, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார், செப். 26-விருதுநகர் மாவட்டத்தில் ஹிந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான பாரம்பரிய கோயில் குளங்கள் பல ஆண்டுகளாக சிதைந்து கிடக்கும் நிலையில், அதை சீரமைப்பதில் ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் அக்கறை இல்லாமலும், தொடர் முயற்சி இல்லாமலும் இருப்பது பக்தர்களை வேதனைப்படுத்தி வருகிறது.மாவட்டத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்

ஸ்ரீவில்லிபுத்துார், செப். 26-விருதுநகர் மாவட்டத்தில் ஹிந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான பாரம்பரிய கோயில் குளங்கள் பல ஆண்டுகளாக சிதைந்து கிடக்கும் நிலையில், அதை சீரமைப்பதில் ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் அக்கறை இல்லாமலும், தொடர் முயற்சி இல்லாமலும் இருப்பது பக்தர்களை வேதனைப்படுத்தி வருகிறது.மாவட்டத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் , வைத்தியநாதசுவாமி கோயில், ராஜபாளையத்தில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் உட்பட ஒவ்வொரு தாலுகாவிலும் பல நுாற்றாண்டு பாரம்பரியமிக்க கோயில்கள் உள்ளன. இங்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பல்வேறு கோயில்களில் குளங்கள் சிதைந்து சுற்றுச்சுவர்கள் கட்டுமானம் சீர்குலைந்து, தண்ணீர் தேக்க முடியாத நிலை காணப்படுகிறது.அந்த வகையில் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருமுக்குளத்தின் சுற்றுச் சுவர்கள் சிதைந்து பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதேபோல் சர்க்கரை குளம் கழிவுகள் சேரும் குளமாக மாறி வருகிறது. புனிதமிக்க திருப்பாற்கடல் திறந்தவெளி மது கூடமாக மாறி வருகிறது. இதனால் இக்குளங்களில் கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் தேக்க முடியாத அவலம் தொடர்கிறது.திருமுக்குளத்தை சீரமைக்க வேண்டும் என ஆன்மிகப் பெரியவர்கள், பக்தர்கள், ஹிந்து அமைப்புகளும் தொடர்ந்து கோரிவந்தாலும் குளங்களை சீரமைக்கும் பணிக்கான அறிகுறியே தென்படவில்லை. கோயில் நிர்வாகத்திடம் கேட்டால் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் துவங்கும் என்ற வழக்கமான பதிலே கடந்த ஐந்து ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது.அறிவியல் தொழில்நுட்பம் வளராத காலத்தில் கட்டப்பட்ட இத்தகைய குளங்கள் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் நாளுக்கு நாள் சிதைந்து வருவது பொதுமக்களின் மனதில் வேதனையை அதிகப்படுத்துகிறது. இனியாவது மாவட்டத்தில் உள்ள கோயில் குளங்களை முழு அளவில் புனரமைக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் .........இனியும் வேண்டாம் தாமதம்பல நூற்றாண்டு பாரம்பரியமிக்க கோயில் குளங்கள் எல்லாம் நாளுக்கு நாள் சிதைந்து வருவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. நவீன கருவிகள் இல்லாத காலத்தில் உருவாக்கப்பட்ட கோயில் குளங்கள் அந்தந்த ஊரின் நீராதாரத்தை காப்பாற்றி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. மாவட்டத்தில் உள்ள கோயில் குளங்களை காலதாமதமின்றி சீரமைக்க ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளும், உள்ளூரை சேர்ந்த அமைச்சரகளும் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் இனியும் வேண்டாம் காலதாமதம்.- சரவண கார்த்திக், விஸ்வ ஹிந்து பரிஷத், ஸ்ரீவில்லிபுத்துார்..........................

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X