பொது செய்தி

தமிழ்நாடு

நத்தை வேகத்தில் நகரும் கொட்டறை நீர்த்தேக்க பணிகள்

Added : செப் 25, 2021
Share
Advertisement
பெரம்பலுார்-பெரம்பலுார் மாவட்டத்தில் கொட்டறை நீர்த்தேக்க கட்டுமான பணி நத்தை வேகத்தில் நடப்பதால், விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரம்பலுார் மாவட்டம் கொட்டறை கிராமம் அருகில், மருதையாற்றின் குறுக்கே பொதுப்பணித் துறை மற்றும் நீர்வள ஆதார துறை மூலம் 108 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என, 2013 ஏப்., 4ல் அப்போதைய
 நத்தை வேகத்தில் நகரும் கொட்டறை நீர்த்தேக்க பணிகள்

பெரம்பலுார்-பெரம்பலுார் மாவட்டத்தில் கொட்டறை நீர்த்தேக்க கட்டுமான பணி நத்தை வேகத்தில் நடப்பதால், விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலுார் மாவட்டம் கொட்டறை கிராமம் அருகில், மருதையாற்றின் குறுக்கே பொதுப்பணித் துறை மற்றும் நீர்வள ஆதார துறை மூலம் 108 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என, 2013 ஏப்., 4ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். இத்திட்டத்திற்கு 893 ஏக்கர் பட்டா நிலமும், 222 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமும் கையகப்படுத்தப்பட்டது. பின், நிலம் கொடுத்த விவசாயிகள் கூடுதல் விலை வழங்கக் கோரியதால், நிலம் கையகப்படுத்த 56 கோடி ரூபாயும், கட்டுமானப் பணிக்காக, 68 கோடி ரூபாயும், மொத்தம் 124 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 2016 பிப்., 27ல் அடிக்கல் நாட்டப்பட்டது.

இரண்டு ஆண்டுகளில் பணியை முடிக்கும் வகையில், 2016 மார்ச், 3ல் நீர்த்தேக்கத்துக்கான கட்டுமானப்பணி துவங்கியது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் 'கான்ராக்ட்' எடுத்து வேலை செய்து வருகிறார். கடந்த 2018 மார்ச் மாதத்துக்குள் அனைத்து வேலைகளும் முடிவுற்றிருக்க வேண்டும். ஆனால், 85 சதவீத பணிகளே முடிந்துள்ளது.துறை அதிகாரிகள் என்ன காரணத்தினாலோ,

இப்பணிகளில் மெத்தனமாக செயல்படுகின்றனர். இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணியை, ஐந்து ஆண்டுகள் ஆகியும் முடிக்காமல் நத்தை வேகத்தில் நடக்கும் நீர்த்தேக்க கட்டுமானப்பணியை துரிதப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டேபோது, 'நிலம் கையகப்படுத்துவதில் கால தாமதம், கொரோனா காலக்கட்டத்தால் பணிகள் நிறுத்தம் போன்றவற்றால் பணிகள் தாமதமாகின.

'விரைவில் பணிகள் முடிந்து, நீர்த்தேக்கம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என்றனர். உற்பத்தி அதிகரிக்கும் இந்த நீர்த்தேக்கம் பயன்பாட்டிற்கு வரும்போது, 212 மில்லியன் கன அடி நீர் தேக்கலாம். கொட்டறை, ஆலத்துார், ஆதனுார், நொச்சிக்குளம், தொண்டபாடி, அழகிரிபாளையம் மற்றும் அரியலுார் ஆகிய ஊர்கள் பயனடைவதுடன், புதிய நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள, 5 கிலோ மீட்டர் துாரத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் கிணற்று பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளும் பயனடைவர். 4,189 ஏக்கர் புன்செய் நிலங்கள் புதிதாக பாசன வசதி பெற்று, 4,830 டன் உணவு உற்பத்தி ஏற்படுத்தப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X