வாருங்கள்! 'எங்கள் நாட்டில் தடுப்பூசி தயாரியுங்கள்' என பிரதமர் மோடி அழைப்பு

Updated : செப் 26, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (26+ 13)
Share
Advertisement
நியூயார்க்:''சேவையே மிகச் சிறந்த தர்மம் என்பதே இந்திய தத்துவம். இதை புரிந்து கொண்டு,இருக்கும் குறைந்த வசதிகளை வைத்து தடுப்பூசிகளை இந்தியா தயாரித்துள்ளது. டி.என்.ஏ., எனப்படும் மரபணுவை அடிப்படையாக வைத்து கொரோனாவுக்கு எதிராக, உலகின் முதல் தடுப்பூசியை இந்தியா உருவாக்கி உள்ளது. அதனால், உலகில் உள்ள தடுப்பூசிதயாரிப்பாளர்கள் இந்தியாவுக்கு வந்து தடுப்பூசிகளை தயாரிக்க
வாருங்கள்! 'எங்கள் நாட்டில் தடுப்பூசி தயாரியுங்கள்' என பிரதமர் மோடி அழைப்பு

நியூயார்க்:''சேவையே மிகச் சிறந்த தர்மம் என்பதே இந்திய தத்துவம். இதை புரிந்து கொண்டு,இருக்கும் குறைந்த வசதிகளை வைத்து தடுப்பூசிகளை இந்தியா தயாரித்துள்ளது. டி.என்.ஏ., எனப்படும் மரபணுவை அடிப்படையாக வைத்து கொரோனாவுக்கு எதிராக, உலகின் முதல் தடுப்பூசியை இந்தியா உருவாக்கி உள்ளது. அதனால், உலகில் உள்ள தடுப்பூசிதயாரிப்பாளர்கள் இந்தியாவுக்கு வந்து தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டும்,'' என, பிரதமர் மோடி, ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பேசினார். ''உலகில் பிற்போக்கு சிந்தனை,அதனால் உருவாகும் பயங்கரவாதத்தை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும்,''என, அரை மணி நேர உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகளின் 76ம் ஆண்டு பொதுச் சபை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. அமெரிக்காவுக்கு நான்கு நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, தன் பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் நேற்று பங்கேற்றார். இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

உலக நாடுகள் ஒன்றரை ஆண்டுகளாக மோசமான சூழ்நிலையை சந்தித்து வருகின்றன. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமான தொற்று நோயால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவிக்கிறேன். ஜனநாயகத்தின் தாயாக கருதப்படும் நாட்டைச் சேர்ந்தவன் என்பதில் பெருமிதம் அடைகிறேன். இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயகம் தழைத்தோங்கியிருந்தது.


பன்முகத்தன்மை

எங்கள் ஜனநாயகத்தின் பலமே, வேற்றுமையில் ஒற்றுமை காண்பதும், பன்முகத்தன்மையும் தான். சிறிய டீக்கடையில் தன் தந்தைக்கு உதவி செய்து வந்த சிறுவனுக்கு, ஐ.நா., பொதுச் சபையில் நான்காவது முறையாக, இந்தியாவின் பிரதமராக பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தான் இந்தியஜனநாயகத்தின் வலிமை. குஜராத் முதல்வராகவும், இந்திய பிரதமராகவும், 20 ஆண்டுகளாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறேன்.

ஜனசங்கத்தின் மூத்த தலைவர் பண்டிட் தீன்தயாளின் 105வது பிறந்த தினத்தில் உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன். தீன்தயாளின் 'அந்த்யோதயா' கொள்கையை பின்பற்றியே கடைக்கோடி மக்களைச் சென்றடையும் வகையிலான பல்வேறு திட்டங்களை இந்திய அரசு வடிவமைத்துள்ளது.இந்தியாவில் வீடில்லாமல் இருந்த ஏழைகள் பலர், இப்போது வீட்டு உரிமையாளராக மாற்றப்பட்டுள்ளனர்.

மாசடைந்த குடிநீர், இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே குறிப்பாக ஏழை மற்றும் வளரும் நாடுகளில் பிரச்னையாக உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், இந்தியாவில் வீடுகளுக்கு குழாய் மூலம் துாய்மையான குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிலம் மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு அவற்றை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நாடு முழுதும் ஆறு லட்சம் கிராமங்களை, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக கண்காணித்து, நிலங்களை அளந்து ஏழைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. வளர்ச்சி மற்றும் மேம்பாடு என்பது அனைவரையும், அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவ காப்பீடும் இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. இந்தியா வளர்ச்சி அடையும் போது உலகமும் வளர்ச்சி அடையும். இந்தியாவில் சீர்திருத்தம் மேற்கொள்ளும் போது, அதன் தாக்கம் உலகம் முழுதும் எதிரொலிக்கிறது. 'சேவையே மிகச் சிறந்த தர்மம்' என்பதே இந்தியாவின் தத்துவம். இதை புரிந்து கொண்டு, இருக்கும் குறைந்த வசதிகளை வைத்து தடுப்பூசிகளை இந்தியா தயாரித்துள்ளது. டி.என்.ஏ., எனப்படும் மரபணுவை அடிப்படையாக வைத்து கொரோனாவுக்கு எதிராக, உலகின் முதல் தடுப்பூசியை இந்தியா உருவாக்கி உள்ளது; இதை, 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போடலாம்.


மீண்டும் ஏற்றுமதி

கொரோனா தடுப்பூசி தயாரிப்பாளர்கள் இந்தியாவுக்கு வந்து தடுப்பூசிகளை தயாரிக்க அழைப்பு விடுக்கிறேன். எங்கள் விஞ்ஞானிகள் கொரோனாவுக்கு எதிராக மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தையும் தயாரித்து வருகின்றனர்.கொரோனா பாதிப்பை உணர்ந்து மனித நேய அடிப்படையில் தடுப்பூசிகளை இந்தியா மீண்டும் ஏற்றுமதி செய்யத் துவங்கிஉள்ளது.

உலகில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. சில நாடுகள் பயங்கரவாதத்தை அரசியல் கேடயமாக பயன்படுத்துகின்றன. இது அவர்களையே திருப்பி தாக்கும் என்பதை அந்நாடுகள் உணர வேண்டும்.பிற்போக்கு சிந்தனை, அதனால் உருவாகும் பயங்கரவாதத்தை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு விவகாரங்களில் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

பயங்கரவாதத்தை பரப்ப ஆப்கானிஸ்தானின் மண்ணை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம். அங்கு நிலவும் சூழலை தங்களுக்கு சாதக மாக எந்த நாடும் பயன்படுத்தக் கூடாது.


அதிருப்தி

ஆப்கனில் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினரை பாதுகாத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டியது நம் கடமை. ஐ.நா., சபையின் செயல்பாடுகள் குறித்து சமீப காலமாக கேள்விகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பருவநிலை மாற்றம், கொரோனா தொற்று பரவல் காலத்தில் ஐ.நா.,வின் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் மிகச் சிறந்த ராஜதந்திர நிபுணரான சாணக்கியர், தன் அர்த்தசாஸ்திர நுாலில், 'சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த நேரமே தோல்விக்கு வழிவகுத்துவிடும்' என குறிப்பிட்டுள்ளார். அதுபோல் காலத்துக்கு ஏற்றபடி ஐ.நா., சபை தன்னை சீர்திருத்தம் செய்து செயல்பட வேண்டியது அவசியம்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


பயங்கரவாதத்துக்கு கண்டனம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் சந்தித்தார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.இந்த சந்திப்புக்கு பின், இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து செயல்படும்.

பயங்கரவாத அமைப்புகள் மீதும், ஐ.நா., சபையால் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப் பட்டு உள்ளவர்கள் மீதும் இரு நாடுகளும் கடும் நடவடிக்கை எடுக்கும். பயங்கரவாதத்தை எந்த நாடும், எதற்காகவும் ஆதரிக்கக் கூடாது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க வேண்டும்.மும்பையில் ௨௦௦௮ல் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவ்வாறு கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தலிபான்களுக்கு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து, பிரதமர் மோடி - அதிபர் பைடன் கூட்டறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஆப்கனில் அமைதி நிலவவும், ஜனநாயகம் திரும்பவும் இரு நாடுகளும் விரும்புகின்றன. பிற நாடுகளில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தானை மீண்டும் மாற்றி விடக் கூடாது என தலிபான்களை, இரு நாடுகளும் எச்சரிக்கின்றன. இந்தியா தலைமையில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி பெண்கள், சிறுவர் - சிறுமியர், சிறுபான்மையினரின் மனித உரிமைகளை தலிபான்கள் மதித்து நடக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பும் உள்நாட்டவர் மற்றும் வெளிநாட்டவர்களை தலிபான்கள் தடுக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாகவும், இந்தியா உட்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாகவும் உள்ளன. தற்காலிக உறுப்பினர் பதவி காலம் இரண்டு ஆண்டுகள். 'பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்; இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும்' என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க, பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், சீனா தன் 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி இதை தடுத்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி - அதிபர் பைடன் கூட்டறிக்கையில் இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டும் என்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளன.

பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு தரும். என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தில் இந்தியா உறுப்பினராக, அமெரிக்காவின் ஆதரவு தொடரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


நாடு திரும்பும் கலைப் பொருட்கள்!

மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:கலாசார பொருட்கள் கடத்தல், திருட்டு போன்றவற்றை தடுக்க அமெரிக்க அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நம் நாட்டைச் சேர்ந்த 157 பழங்கால கலைப் பொருட்கள் அமெரிக்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு, அங்கு இருந்தன; அவை பிரதமர் மோடியிடம், அமெரிக்க அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டன. இதில், 71 பொருட்கள் நம் கலாசாரத்துடன் தொடர்புடையவை.

மேலும், ஹிந்து மதத்துடன் தொடர்புடைய, 60 பொருட்களும், புத்த மதத்துடன் தொடர்புடைய, 16 பொருட்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.கடந்த, 11 மற்றும் 14ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஹிந்துக் கடவுளான நடராஜர் சிலை உள்ளிட்டவை ஒப்படைக்கப்பட்டுள்ளன.கடந்த 1976 - 2013 வரையில் வெளிநாடுகளில் இருந்து, 13 பொருட்கள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் 2014ல் மோடி பிரதமரான பின், இதுவரை, 200க்கும் மேற்பட்ட பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு வந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (26+ 13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kamaraj jawahar - CA,யூ.எஸ்.ஏ
26-செப்-202123:41:41 IST Report Abuse
kamaraj jawahar ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசி நம் நாட்டின் கௌரவத்தை குறைத்து விட்டார்
Rate this:
Cancel
Khalil - Chicago,யூ.எஸ்.ஏ
26-செப்-202123:28:53 IST Report Abuse
Khalil புதிய புத்தகம் வெளியிட்டார்... தலைப்பு : வெறும் வாயில் வடை சுடுவது எப்படி
Rate this:
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
26-செப்-202116:38:16 IST Report Abuse
balakrishnan இந்தியா சரியான பிரதமரை தேர்ந்தேடுத்துள்ளது .
Rate this:
selva - Chennai,இந்தியா
26-செப்-202122:16:33 IST Report Abuse
selvaரோம்ப சரிதான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X