பொது செய்தி

இந்தியா

தெருவில் எல்.இ.டி., பல்ப் பொருத்த முட்டுக்கட்டை தெரு விளக்குகளில் எல்.இ.டி., பல்ப் பொருத்தும் திட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் முட்டுக்கட்டை

Added : செப் 25, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''பெங்களூரில் தெரு விளக்குகளில் எல்.இ.டி., பல்ப் பொருத்தும் திட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகளே முட்டுக்கட்டையாக உள்ளனர்,'' என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து, ஆம் ஆத்மி பெங்களூரு பிரிவு தலைவர் மோகன் தாசரி கூறியதாவது:ஆண்டு தோறும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில், பெங்களூரில் தெரு விளக்குகளுக்கு, எல்.இ.டி., பல்புகள்

பெங்களூரு : ''பெங்களூரில் தெரு விளக்குகளில் எல்.இ.டி., பல்ப் பொருத்தும் திட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகளே முட்டுக்கட்டையாக உள்ளனர்,'' என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து, ஆம் ஆத்மி பெங்களூரு பிரிவு தலைவர் மோகன் தாசரி கூறியதாவது:ஆண்டு தோறும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில், பெங்களூரில் தெரு விளக்குகளுக்கு, எல்.இ.டி., பல்புகள் பொருத்த திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு பெங்களூரின் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர். இவர்களால் மூன்று ஆண்டில், 847 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தை மிச்சப்படுத்தும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்விஷயத்தில் முதல்வர் தலையிட வேண்டும். தெரு விளக்குகளை நிர்வகிக்க பெங்களூரு மாநகராட்சி, ஆண்டு தோறும் 240 கோடி ரூபாய் செலவிடுகிறது.

இதில் 200 கோடி ரூபாயை, மின் கட்டணமாக பெஸ்காமுக்கு செலுத்துகிறது.எல்.இ.டி., பல்புகளை பொருத்தினால் 85.80 சதவீதம் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். இது போன்ற திட்டத்தை செயல்படுத்துவதில், தேவையின்றி தாமதமாக்குகின்றனர். நகரின் மக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மிச்சப்படுத்தும் திட்டத்துக்கு, இடையூறு செய்யும் அரசியல்வாதிகள், அபிவிருத்திக்கு ஆதரவாக இல்லை என்பது தெரிகிறது. முதல்வர் தலையிட்டு, எல்.இ.டி., பல்புகள் பொருத்த தொந்தரவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X