பொது செய்தி

இந்தியா

அதிகாரிகள் - அரசியல்வாதிகள் கவுரவ பிரச்னை மைசூரு குடோனில் துணிப்பைகள் தேக்கம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
மைசூரு : அதிகாரிகள், அரசியல்வாதிகள் இடையிலான கவுரவ பிரச்னையால் பிளாஸ்டிக்குக்கு மாற்றாக வினியோகிப்பதற்காக வாங்கப்பட்ட லட்சக்கணக்கான துணிப்பைகள் குடோனில் போடப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளது. மைசூரு மாவட்ட கலெக்டராக இருந்த ரோகிணி சிந்துாரி, இம்மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை தடை செய்யவும், பிளாஸ்டிக் இல்லா நகராக்கவும் திட்டம் வகுத்தார். அந்தந்த

மைசூரு : அதிகாரிகள், அரசியல்வாதிகள் இடையிலான கவுரவ பிரச்னையால் பிளாஸ்டிக்குக்கு மாற்றாக வினியோகிப்பதற்காக வாங்கப்பட்ட லட்சக்கணக்கான துணிப்பைகள் குடோனில் போடப்பட்டுள்ளது.

மக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளது. மைசூரு மாவட்ட கலெக்டராக இருந்த ரோகிணி சிந்துாரி, இம்மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை தடை செய்யவும், பிளாஸ்டிக் இல்லா நகராக்கவும் திட்டம் வகுத்தார். அந்தந்த உள்ளாட்சிகள் மூலம், பொது மக்களுக்கு துணிப்பை வழங்க முடிவு செய்தார். இதற்காக லட்சக்கணக்கான பைகள் வாங்கப்பட்டது. ஆனால் மாநகராட்சி கவுன்சிலர்களின் கவனத்துக்கு கொண்டு வராமல் சரியான திட்டமிடாமல் மாநகராட்சி நிதியில் வாங்கியது சட்ட விரோதம் என சில கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.போராட்டமும் நடத்தினர். மாவட்ட பொறுப்பு அமைச்சரிடமும் வேண்டுகோள் விடுத்தனர். இதற்கிடையில் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சா.ரா.மகேஷூம், இவ்விஷயத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, ரோகிணி சிந்துாரி மீது, குற்றம்சாட்டினார்.அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளின் பனிப்போரால், பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய, 4.5 லட்சம் பைகள் குடோனில் போடப்பட்டுள்ளது.

மக்களின் வரிப்பணம் வீணாகிறது. அடுத்த முறை மைசூரு மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், துணிப்பை வினியோகிக்கும் விஷயம் விவாதிக்கப்படும். கவுன்சிலர்களின் கருத்துப்படி வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.ம.ஜ.த., உட்பட, உறுப்பினர்கள் சிலர் கவுன்சில் கூட்டத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். மாநகராட்சி மேயர் சுனந்தா பாலநேத்ரா கூறியதாவது:ஏற்கனவே துணிப்பைகள் வந்துள்ளது. ஆனால் பைகள் தரமானதாக இல்லை. இது குறித்து கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும். அதன்பின் உள்ளாட்சி, துப்புரவு தொழிலாளர்கள், கவுன்சிலர்கள் மூலம், வீடு வீடாக வழங்கப்படும்.ஒவ்வொரு வீட்டுக்கும், தலா இரண்டு பைகள் வழங்கப்படும். வரும் 30ல் கவுன்சில் கூட்டம் நடக்கிறது. அன்றைய தினம், கவுன்சிலர்கள் தங்களின் கருத்தை தெரிவிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X