அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கோவில் நகைகளை உருக்குவதில் அரசு நேர்மையாக செயல்படும்'

Added : செப் 26, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
மதுரை-''கோவில் நகைகளை உருக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சிக்கல்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், மேம்படுத்தப்பட்ட ஓதுவார் பயிற்சி பள்ளியை அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார். தீ விபத்திற்கு உள்ளான வீரவசந்தராய மண்டப சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். பார்வை பாதித்து சிகிச்சை
 'கோவில் நகைகளை உருக்குவதில் அரசு நேர்மையாக செயல்படும்'

மதுரை-''கோவில் நகைகளை உருக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சிக்கல்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், மேம்படுத்தப்பட்ட ஓதுவார் பயிற்சி பள்ளியை அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார். தீ விபத்திற்கு உள்ளான வீரவசந்தராய மண்டப சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். பார்வை பாதித்து சிகிச்சை பெற்று வரும் யானை பார்வதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடத்துவதில் ஆகம விதிகள் சிக்கல் உண்டா என ஆய்வு செய்து பக்தர்களின் கருத்துகளை கேட்டு முடிவு எடுக்கப்படும்

. சோளிங்கர், அய்யர்மலை கோவில்களில் இந்தாண்டு இறுதிக்குள் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும். கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுத்த பல்வேறு ஆபரணங்கள் ஒன்பது ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. இதில், தெய்வங்களுக்கு பயன்படுத்தக் கூடியவை தவிர, மற்ற ஆபரணங்களை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி அதன் மூலம் கிடைக்கும் வைப்பு நிதி, அந்தந்த கோவில் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

கோவில்களை தமிழக அளவில் மூன்று மண்டலங்களாக பிரித்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் நகைகளை பிரித்து உருக்கும் பணி நடக்கும்.நடவடிக்கைநகைகளை உருக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.அமைச்சர் மூர்த்தி, அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
27-செப்-202105:25:25 IST Report Abuse
Siva Kumar தீமுகவின் நேர்மை உலகறிந்த உண்மை. தேன் எடுத்தவன் புறங்கையை மட்டும் நக்குவான். ஆனால் தீமுகவினரோ தேன் முழுசையும் எடுத்துக்கிட்டு ஒரு சொட்டுதான் வந்தது அதுவும் கீழே சிந்தீருச்சுன்னு உண்மையை சொல்வான்.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
27-செப்-202100:54:12 IST Report Abuse
spr நகைகளை உருக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும். என்று சொல்வதாலேயே இதில் ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கிறது போலத் தோன்றுகிறதே உருக்குவதில் நேர்மை சரி உருக்கும் போதே அவை காணப்படாத தங்கம் உருக்குவதால் சேதாரம் என்றெல்லாம் பங்கு போட்டுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது அப்படியும் நடந்தால் யார் கொடுத்தது கலப்படம் என்றறியாத வகையில் (அப்படித்தான் நடக்கும்) நகைகளை ஆண்டவனுக்கு காணிக்கையாகக் கொடுத்தவர் தான் கலப்பட நகைகளையா ஆண்டவனுக்கு கொடுத்தோம் என்றும் கடைக்காரர் தங்களை ஏமாற்றி விட்டாரே எனவும் மனம் வருந்தலாம் வெல்லப் பிள்ளையாருக்கு வெல்லமே நைவேத்தியம்.வெல்லம் இல்லாது போனாலும் அந்த வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி அதற்கே நைவேத்தியம் செய்கிறது. இப்படியொரு வழாக்கம் உண்டு அது போல ஆலைய நிலங்களின் வருமானத்தில் நித்திய பூஜைகள் செய்வதில் நியாயம் இருக்கிறது ஆனால் வகையிலும் கை வைக்க வேண்டுமா இப்படி ஆலயங்களை நடத்த முடியாத நிலையில் எதற்கு அறநிலையத் துறை என்றொரு அமைப்பு இந்தக் கோயில்களுக்கு மட்டும் தேவை அவற்றையும் அரசு அவற்றையும் தனியார் வசம் விட்டுவிட வேண்டியதுதானே
Rate this:
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
27-செப்-202100:43:52 IST Report Abuse
Bharathi பண்றது கயவாணித்தனம் இதுல நேர்மையாம். எங்க கோயில் நகைகளை உருக்க இந்த நாத்திக கட்சி யார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X