தமிழகத்தில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள் : கார்த்தி சிதம்பரம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள் : கார்த்தி சிதம்பரம்

Added : செப் 26, 2021
Share
காரைக்குடி--''தமிழகத்தில் நடந்து வரும் தொடர் கொலைச் சம்பவங்கள் வருத்தமளிக்கிறது.இதனை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்,'' என, காங்., எம்.பி., கார்த்தி கூறினார்.காரைக்குடி அருகே கண்டனுாரில் அவர் கூறியதாவது:சர்வ வல்லமை படைத்த உள்துறை அமைச்சர் இந்தியாவை பாதுகாக்கிறார்என்று பிரசாரம் செய்யும் பா.ஜ., டில்லியில் நடந்த துப்பாக்கி சூட்டிற்குபதில் சொல்ல வேண்டும்.

காரைக்குடி--''தமிழகத்தில் நடந்து வரும் தொடர் கொலைச் சம்பவங்கள் வருத்தமளிக்கிறது.இதனை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்,'' என, காங்., எம்.பி., கார்த்தி கூறினார்.

காரைக்குடி அருகே கண்டனுாரில் அவர் கூறியதாவது:சர்வ வல்லமை படைத்த உள்துறை அமைச்சர் இந்தியாவை பாதுகாக்கிறார்என்று பிரசாரம் செய்யும் பா.ஜ., டில்லியில் நடந்த துப்பாக்கி சூட்டிற்குபதில் சொல்ல வேண்டும். டில்லியின் பாதுகாப்பு என்பது நேரடியாகஉள்துறை அமைச்சரிடம் உள்ளது.

டில்லி நீதிமன்றத்தில் கொலை நடந்துள்ளதுஎன்றால், அது நிர்வாகம் சீர்கெட்டுள்ளது என்பதை தான் குறிக்கும். இதற்குபா.ஜ.,வும், மத்திய அரசும் உரிய விளக்கமளிக்க வேண்டும்.தமிழகத்தில் தொடர் கொலைச் சம்பவங்கள் நடப்பது வருத்தமளிக்கிறது.முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கவனித்து காவல் துறைக்கு ஆணையிட்டு இதுபோன்றசம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். கொலைச்சம்பவங்களில்ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X