பாதுகாப்பு வேலி அகற்றம்

Added : செப் 26, 2021
Share
Advertisement
பண்ணைக்காடு, :தாண்டிக்குடி -- பண்ணைக்காடு ரோட்டில் உள்ள எதிரொலிப்பாறையில் வேலி அகற்றப்பட்டுள்ளது.எதிரொலி பாறைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளது. இச்சூழலில் கடந்தாண்டு இங்குள்ள மரங்களின் அடிப்பகுதியை மர்மநபர்கள் சிலர் வெட்டியதால் சர்ச்சை எழுந்தது.இப்பிரச்னையை தொடர்ந்து

பண்ணைக்காடு, :தாண்டிக்குடி -- பண்ணைக்காடு ரோட்டில் உள்ள எதிரொலிப்பாறையில் வேலி அகற்றப்பட்டுள்ளது.எதிரொலி பாறைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளது. இச்சூழலில் கடந்தாண்டு இங்குள்ள மரங்களின் அடிப்பகுதியை மர்மநபர்கள் சிலர் வெட்டியதால் சர்ச்சை எழுந்தது.இப்பிரச்னையை தொடர்ந்து பெரும்பள்ளம் வனத்துறையினர் அறிவிப்பு பலகை நிறுவி, வேலி அமைத்தனர்.அறிவிப்பு பலகை, வேலி சில மாதங்களாக அகற்றப்பட்டு மீண்டும் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாக தெரிகிறது.மேலும் இப்பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு அச்சுறுத்தலும் உள்ளது. மது அருந்துவதுடன், மர்ம நபர்கள் இங்கு சந்தன மரத்தை வேவு பார்க்கும் வாய்ப்பு இருப்பதால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X