சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிரைவரை கொன்ற வாலிபர் கைது

Added : செப் 26, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்-தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, பொன்னவராயன்கோட்டையைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தன் பிறந்த நாளான நேற்று முன்தினம் இரவு நண்பர்களை அழைத்து 'கேக்' வெட்டியும், மது அருந்தியும் கொண்டாடியுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் புண்ணியமூர்த்தி, 42, சரவணன், 34, ஆகியோரும் பங்கேற்றனர்.புண்ணியமூர்த்திக்கும், சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ஒருவரை

தஞ்சாவூர்-தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, பொன்னவராயன்கோட்டையைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தன் பிறந்த நாளான நேற்று முன்தினம் இரவு நண்பர்களை அழைத்து 'கேக்' வெட்டியும், மது அருந்தியும் கொண்டாடியுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் புண்ணியமூர்த்தி, 42, சரவணன், 34, ஆகியோரும் பங்கேற்றனர்.புண்ணியமூர்த்திக்கும், சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். சக நண்பர்கள், இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பினர். வீட்டுக்கு சென்ற புண்ணியமூர்த்தி, திண்ணையில் படுத்து துாங்கியுள்ளார். நள்ளிரவில் அங்கு சென்ற சரவணன், புண்ணியமூர்த்தியின் நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்தார். பின் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பட்டுக்கோட்டை தாலுகா போலீசார், சரவணனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X