பொது செய்தி

தமிழ்நாடு

அரசு விடுதி பெண் சமையலர் தற்கொலை முயற்சி

Added : செப் 26, 2021
Share
Advertisement
பெரியகுளம்-தேனி மாவட்டம் தாமரைக்குளம் அரசு கள்ளர் மாணவியர் விடுதி சமையலர் மாரியம்மாள், மதுரை கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனர் செல்வராஜ், விடுதி காப்பாளர் ராஜேஸ்வரி அவமானப்படுத்தியதாக தற்கொலைக்கு முயன்றார். செல்வராஜ், ராஜேஸ்வரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மதுரை மாவட்டம், செக்கானுாரணியைச் சேர்ந்த லோகராஜன் மனைவி மாரியம்மாள் 35. கணவரை இழந்த இவர்
 அரசு விடுதி பெண் சமையலர் தற்கொலை முயற்சி

பெரியகுளம்-தேனி மாவட்டம் தாமரைக்குளம் அரசு கள்ளர் மாணவியர் விடுதி சமையலர் மாரியம்மாள், மதுரை கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனர் செல்வராஜ், விடுதி காப்பாளர் ராஜேஸ்வரி அவமானப்படுத்தியதாக தற்கொலைக்கு முயன்றார்.

செல்வராஜ், ராஜேஸ்வரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மதுரை மாவட்டம், செக்கானுாரணியைச் சேர்ந்த லோகராஜன் மனைவி மாரியம்மாள் 35. கணவரை இழந்த இவர் தாமரைக்குளம் அரசு கள்ளர் மாணவியர் விடுதியில் 2015ல் சமையலராக சேர்ந்தார். கொரோனாவால் மூடப்பட்ட விடுதி செப்., 1ல் திறக்கப்பட்டது.

மாரியம்மாள் சமையலை, விடுதி காப்பாளர் ராஜேஸ்வரி குறை கூறியுள்ளார். 4 மாதம் சம்பளமும் வழங்கப்படவில்லை. சம்பளம் பெறவும், பணிமாறுதல் கோரியும் மதுரை கள்ளர் சீரமைப்புதுறை அலுவலகத்தில் இணை இயக்குனர் செல்வராஜிடம் மனு அளிக்க செப்., 23 ல் மாரியம்மாள் சென்றார். செல்வராஜ் மாரியம்மாளை அவமானப்படுத்தினாராம். விடுதிக்கு திரும்பி வந்த மாரியம்மாளை ராஜேஸ்வரி மிரட்டினாராம். மாரியம்மாள் விடுதியில் விஷம் குடித்தார்.தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெரியகுளம் தென்கரை போலீசார் செல்வராஜ், ராஜேஸ்வரி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X