உடலை கிரேனில் தொங்கவிட்டு தலிபான் பயங்கரவாதிகள் அராஜகம்

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
காபூல் : ஆப்கானிஸ்தானில் உயிரிழந்தவரின் உடலை ராட்சத 'கிரேன்' ஒன்றில் தலிபான் அமைப்பினர் கட்டித் தொங்கவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல், அனைத்து உலக நாடுகளின் கவனமும், ஆப்கன் பக்கம் திரும்பி உள்ளது. அடக்குமுறைகளை தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் கட்டவிழ்க்கலாம் என

காபூல் : ஆப்கானிஸ்தானில் உயிரிழந்தவரின் உடலை ராட்சத 'கிரேன்' ஒன்றில் தலிபான் அமைப்பினர் கட்டித் தொங்கவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news




தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல், அனைத்து உலக நாடுகளின் கவனமும், ஆப்கன் பக்கம் திரும்பி உள்ளது. அடக்குமுறைகளை தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் கட்டவிழ்க்கலாம் என சர்வதேச நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இங்குள்ள ஹெராட் நகரில் நேற்று கிரேன் ஒன்றில் உயிரிழந்தவரின் உடலை தலிபான் அமைப்பினர் கட்டித் தொங்கவிட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news




இது குறித்து அந்த சம்பவத்தை நேரில் பார்த்த வாஜிர் அகமது சித்திக் என்பவர் கூறியதாவது:ஹெராட் நகரில் உள்ள மைய சதுக்கத்திற்கு, உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை தலிபான் அமைப்பினர் எடுத்து வந்தனர். பின், அதிலிருந்த ஒரு உடலை மட்டும், அவர்கள் ராட்சத கிரேனில் கட்டி தொங்கவிட்டனர்.மீதமுள்ள மூன்று உடல்களும் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டன. போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இவர்கள் நான்கு பேரும் கடத்தலில் ஈடுபட்டபோது சிக்கியதாக தலிபான் அமைப்பினர் தெரிவித்தனர். இந்த காட்சியை பார்த்த மக்கள் பீதியடைந்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
27-செப்-202113:34:59 IST Report Abuse
jayvee சிவில் சமஉரிமை சட்டத்திநை எதிரிக்கும் பச்சைகளும் இந்தியாவில் இப்படிப்பட்ட தண்டனைகளை கொடுத்தால் அடங்கிவிடுவார்கள் ..
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
26-செப்-202114:31:31 IST Report Abuse
Kumar ஏரோபிளைன்ல புட்போர்டு அடிக்கிற கூட்டத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.கூடிய சீக்கிரம் புட்பால் விளையாடுவார்கள் தலைகளை வைத்து. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
26-செப்-202111:50:25 IST Report Abuse
duruvasar தேசத்துக்கு தேசம் விருமாண்டிகள் என பெயர், வைத்துக்கொண்டு, பாரம்பரிய விருமாண்டி என்ற பெயரை கெடுக்க ஒரு சில குழுக்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X