பொது செய்தி

இந்தியா

சினிமா செய்திகள்

Added : செப் 26, 2021
Share
Advertisement
சினி கடலை படம்: 1.Sangeetha sringeri *ஒன்றன்பின் ஒன்றாக... நடிகை சங்கீதா சிருங்கேரி, தற்போது குஷியில் இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு பின் அவரது படம் திரைக்கு வருவதே அவரது மகிழ்ச்சிக்கு காரணம். இதுபற்றி அவரிடம் கேட்ட போது, ''2018ல் திரைக்கு வந்த 'ஏ+' படம் தான், நான் நடித்த கடைசி படம். அதன்பின் '777 சார்லி' படத்தில் நடித்தேன். இரண்டு ஆண்டு வேறு படத்தில் நடிக்கக்கூடாது என, ஒப்பந்தம்

சினி கடலை படம்: 1.Sangeetha sringeri *ஒன்றன்பின் ஒன்றாக... நடிகை சங்கீதா சிருங்கேரி, தற்போது குஷியில் இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு பின் அவரது படம் திரைக்கு வருவதே அவரது மகிழ்ச்சிக்கு காரணம். இதுபற்றி அவரிடம் கேட்ட போது, ''2018ல் திரைக்கு வந்த 'ஏ+' படம் தான், நான் நடித்த கடைசி படம். அதன்பின் '777 சார்லி' படத்தில் நடித்தேன்.

இரண்டு ஆண்டு வேறு படத்தில் நடிக்கக்கூடாது என, ஒப்பந்தம் செய்திருந்ததால் எந்த படத்திலும் நடிக்கவில்லை. என் நண்பர்களின் படங்கள், திரையரங்கு, 'ஓடிடி' யில் திரைக்கு வந்தன. என் படம் வரவில்லையே என்ற சிறு வருத்தம் எனக்கிருந்தது. இப்போது நான்கைந்து படங்கள், ஒன்றன்பின் ஒன்றாக திரைக்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது,'' என்றார். படம்: 2. Jaggesh* படப்பிடிப்பு எப்போது?சந்தோஷ் ஆனந்தராம், நடிகர் ஜக்கேஷ் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு 'ராகவேந்திரா ஸ்டோர்ஸ்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.படம் பற்றி இயக்குனர் கூறுகையில், ''படத்தில் ஜக்கேஷ் போஸ்டர் வெளியிட்டுள்ளோம்.

இதில் அவர் சமையல்காரராக நடிக்கிறார். நகைச்சுவை, அரசியல் உட்கொண்ட புதுமையான முறையில், திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்டிமென்ட், பொழுதுபோக்கு என அனைத்தும் இதில் இருக்கும். நவம்பர் 22ல் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளோம். படத்தை பற்றி கூடுதல் தகவல்களை விவரிக்கிறோம்,'' என்றார். படம்: 3.Ashika Ranganath* தமிழில் முதல் படம்!நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் நான்கைந்து படங்கள், திரைக்கு வர வரிசையில் நின்றுள்ளன. இதற்கிடையில் மற்றொரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தன் படங்களை பற்றி, ஆஷிகா ரங்கநாத்திடம் கேட்ட போது, 'அவதார புருஷா' , 'மதகஜா', 'ரெமோ' படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன. இது தவிர மெடிக்கல் திரில்லர் கதையுள்ள, '02' என்ற படத்திலும் நான் நடிக்கிறேன். அதுமட்டுமின்றி தமிழில் அதர்வாவுடன் நடிக்கிறேன். இது நான் நடிக்கும் முதல் தமிழ் படம்,'' என்றார். படம்: 4.Ramya* ரம்யா தடுமாற்றம்!நடிப்புக்கு 'குட்பை' கூறி, அரசியலுக்கு சென்ற நடிகை 'குத்து' ரம்யா, அரசியலுக்கும் முழுக்கு போட்டு ஒதுங்கியுள்ளார்.

கன்னட திரையுலகில், இன்றைக்கும் இவருக்கு மவுசு உள்ளது. இவர் சம்மதித்தால் பட வாய்ப்பு குவியும் என்பதில் சந்தேகமே இல்லை. இவர் எப்போது நடிப்புக்கு திரும்புவார் என, ரசிகர்கள் மட்டுமல்ல, தயாரிப்பாளர்கள், இயக்குனர்களும் காத்திருக்கின்றனர். ஆனால் ரம்யா தெளிவான முடிவுக்கு வரவில்லை.அவர் கூறுகையில், ''இப்போதும் எனக்கு ஆபர்கள் வருகின்றன. நான் 'ஓகே' சொன்னால் பலரும் குஷியடைவர். நடிப்புக்கு திரும்புவது குறித்து பின்னர் பார்க்கலாம்,'' என்றார். படம்: 5.Sanchari Vijay* படக்குழுவினர் சோகம்!எந்த படமாக இருந்தாலும் திரைக்கு வரும் போது அதில் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள் படபடப்பான மனநிலையில் இருப்பர். பட பிரச்சாரத்தின் போது, இவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். படம்

திரைக்கு வந்தால், படக்குழுவினர் குஷிக்கு அளவே இருக்காது. ஆனால் இந்த வாரம், 'புக்சட்டே லைபு' படம் திரைக்கு வந்த போது, படக்குழுவினர் சோகத்தில் மூழ்கியிருந்தனர். ஏனென்றால் இதில் நாயகனாக நடித்திருந்த, நடிகர் சஞ்சாரி விஜய், தற்போது உயிருடன் இல்லை. சில மாதங்களுக்கு முன், சாலை விபத்தில் பலியானார். படக்குழுவினர் கூறுகையில், ''படப்பிரசாரத்துக்கு, அனிமேஷன் மூலம், சஞ்சாரி விஜயை, ரசிகர்கள் முன்னிலையில் கொண்டு வர முயற்சித்தோம். அவர் நம்மோடு இல்லையென்பதை ஜீரணிக்க முடியவில்லை,'' என்றனர். படம்: 6.Ravi Shankar* டப்பிங் பேச அதிக நாட்கள்!மிரட்டலான வில்லன்களில் நடிகர் ரவிசங்கரும் ஒருவர். குணச்சித்திர வேடங்களிலும் கலக்குகிறார். இவர் சிறந்த 'டப்பிங்' கலைஞரும் கூட. இதுவரை 4,000 க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி பேசியுள்ளார். இந்த அனுபவம் பற்றி அவரிடம் கேட்ட போது, ''விரைவில் டப்பிங் பேசி முடிக்கும் பழக்கம் என்னுடையது. முதன் முறையாக, 'பயலுசீமே' படத்தில், என் கதாபாத்திரத்துக்கு, டப்பிங் செய்ய நான்கு நாட்களானது. வட மாவட்ட பாணியில் கன்னடம் பேசுவது கஷ்டமாக இருந்தது. படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துள்ளது,'' என்றார். படம்: 7.Sanjana Galrani* நான்கு பேரே போதும்!நீண்ட இடைவெளிக்கு பின், நடிகை சஞ்சனா கல்ரானி, புதிய படத்துக்கு கையெழுத்திட்டுள்ளார். 'மணிசங்கர்' என்ற பெயருடைய இப்படம் கன்னடத்துடன், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் தயாராகிறது.

போதைப்பொருள் வழக்கில் சிக்கி, கைதான கசப்பான அனுபவத்தை அவர் மறக்கவில்லை.சஞ்சனா கூறுகையில், ''வெளியே நன்றாக இருப்பது போன்று தெரிந்தாலும் மனதில் வலி, வேதனை உள்ளது. பல குற்றச்சாட்டால் கஷ்டப்பட்டேன். இந்த நேரத்தில் என் பெற்றோரும், கணவர் வீட்டினரும் எனக்கு உறுதுணையாக நின்றனர். நமக்கு ஆயிரம் நண்பர்கள் தேவையில்லை. நாம் இறந்தால் சுமந்து செல்ல, நான்கு நல்லவர்களை மட்டும் சம்பாதித்தால் போதுமென தோன்றியது,'' என்றார்.ஒன்றன்பின் ஒன்றாக... நடிகை சங்கீதா சிருங்கேரி, தற்போது குஷியில் இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு பின் அவரது படம் திரைக்கு வருவதே அவரது மகிழ்ச்சிக்கு காரணம். இதுபற்றி அவரிடம் கேட்ட போது, ''2018ல் திரைக்கு வந்த ஏ+ படம் தான், நான் நடித்த கடைசி படம்.

அதன்பின் 777 சார்லி படத்தில் நடித்தேன். இரண்டு ஆண்டு வேறு படத்தில் நடிக்கக்கூடாது என, ஒப்பந்தம் செய்திருந்ததால் எந்த படத்திலும் நடிக்கவில்லை. என் நண்பர்களின் படங்கள், திரையரங்கு, 'ஓடிடி' யில் திரைக்கு வந்தன. என் படம் வரவில்லையே என்ற சிறு வருத்தம் எனக்கிருந்தது. இப்போது நான்கைந்து படங்கள், ஒன்றன்பின் ஒன்றாக திரைக்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது,'' என்றார். படப்பிடிப்பு எப்போது?சந்தோஷ் ஆனந்தராம், நடிகர் ஜக்கேஷ் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு ராகவேந்திரா ஸ்டோர்ஸ்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.படம் பற்றி இயக்குனர் கூறுகையில், ''படத்தில் ஜக்கேஷ் போஸ்டர் வெளியிட்டுள்ளோம். இதில் அவர் சமையல்காரராக நடிக்கிறார். நகைச்சுவை, அரசியல் உட்கொண்ட புதுமையான முறையில், திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்டிமென்ட், பொழுதுபோக்கு என அனைத்தும் இதில் இருக்கும். நவம்பர் 22ல் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளோம். படத்தை பற்றி கூடுதல் தகவல்களை விவரிக்கிறோம்,'' என்றார். தமிழில் முதல் படம்!நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் நான்கைந்து படங்கள், திரைக்கு வர வரிசையில் நின்றுள்ளன.

இதற்கிடையில் மற்றொரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தன் படங்களை பற்றி, ஆஷிகா ரங்கநாத்திடம் கேட்ட போது, அவதார புருஷா, மதகஜா, ரெமோ படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன. இது தவிர மெடிக்கல் திரில்லர் கதையுள்ள, 02 என்ற படத்திலும் நான் நடிக்கிறேன். அதுமட்டுமின்றி தமிழில் அதர்வாவுடன் நடிக்கிறேன். இது நான் நடிக்கும் முதல் தமிழ் படம்,'' என்றார். ரம்யா தடுமாற்றம்!நடிப்புக்கு 'குட்பை' கூறி, அரசியலுக்கு சென்ற நடிகை 'குத்து' ரம்யா, அரசியலுக்கும் முழுக்கு போட்டு ஒதுங்கியுள்ளார். கன்னட திரையுலகில், இன்றைக்கும் இவருக்கு மவுசு உள்ளது. இவர் சம்மதித்தால் பட வாய்ப்பு குவியும் என்பதில் சந்தேகமே இல்லை. இவர் எப்போது நடிப்புக்கு திரும்புவார் என, ரசிகர்கள் மட்டுமல்ல, தயாரிப்பாளர்கள், இயக்குனர்களும் காத்திருக்கின்றனர். ஆனால் ரம்யா தெளிவான முடிவுக்கு வரவில்லை.அவர் கூறுகையில், ''இப்போதும் எனக்கு ஆபர்கள் வருகின்றன. நான் 'ஓகே' சொன்னால் பலரும் குஷியடைவர்.

நடிப்புக்கு திரும்புவது குறித்து பின்னர் பார்க்கலாம்,'' என்றார். படக்குழுவினர் சோகம்!எந்த படமாக இருந்தாலும் திரைக்கு வரும் போது அதில் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள் படபடப்பான மனநிலையில் இருப்பர். பட பிரச்சாரத்தின் போது, இவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். படம் திரைக்கு வந்தால், படக்குழுவினர் குஷிக்கு அளவே இருக்காது. ஆனால் இந்த வாரம், புக்சட்டே லைபு படம் திரைக்கு வந்த போது, படக்குழுவினர் சோகத்தில் மூழ்கியிருந்தனர். ஏனென்றால் இதில் நாயகனாக நடித்திருந்த, நடிகர் சஞ்சாரி விஜய், தற்போது உயிருடன் இல்லை. சில மாதங்களுக்கு முன், சாலை விபத்தில் பலியானார். படக்குழுவினர் கூறுகையில், ''படப்பிரசாரத்துக்கு, அனிமேஷன் மூலம், சஞ்சாரி விஜயை, ரசிகர்கள் முன்னிலையில் கொண்டு வர முயற்சித்தோம். அவர் நம்மோடு இல்லையென்பதை ஜீரணிக்க முடியவில்லை,'' என்றனர். டப்பிங் பேச அதிக நாட்கள்!மிரட்டலான வில்லன்களில் நடிகர் ரவிசங்கரும் ஒருவர். குணச்சித்திர வேடங்களிலும் கலக்குகிறார்.

இவர் சிறந்த 'டப்பிங்' கலைஞரும் கூட. இதுவரை 4,000 க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி பேசியுள்ளார். இந்த அனுபவம் பற்றி அவரிடம் கேட்ட போது, ''விரைவில் டப்பிங் பேசி முடிக்கும் பழக்கம் என்னுடையது. முதன் முறையாக, பயலுசீமே படத்தில், என் கதாபாத்திரத்துக்கு, டப்பிங் செய்ய நான்கு நாட்களானது. வட மாவட்ட பாணியில் கன்னடம் பேசுவது கஷ்டமாக இருந்தது. படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துள்ளது,'' என்றார். நான்கு பேரே போதும்!நீண்ட இடைவெளிக்கு பின், நடிகை சஞ்சனா கல்ரானி, புதிய படத்துக்கு கையெழுத்திட்டுள்ளார். மணிசங்கர் என்ற பெயருடைய இப்படம் கன்னடத்துடன், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் தயாராகிறது.

போதைப்பொருள் வழக்கில் சிக்கி, கைதான கசப்பான அனுபவத்தை அவர் மறக்கவில்லை.சஞ்சனா கூறுகையில், ''வெளியே நன்றாக இருப்பது போன்று தெரிந்தாலும் மனதில் வலி, வேதனை உள்ளது. பல குற்றச்சாட்டால் கஷ்டப்பட்டேன். இந்த நேரத்தில் என் பெற்றோரும், கணவர் வீட்டினரும் எனக்கு உறுதுணையாக நின்றனர். நமக்கு ஆயிரம் நண்பர்கள் தேவையில்லை. நாம் இறந்தால் சுமந்து செல்ல, நான்கு நல்லவர்களை மட்டும் சம்பாதித்தால் போதுமென தோன்றியது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X