சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொய் பணம் வாங்க சென்றவர் 'கொரோனா'வை வாங்கி வந்தார்!

Added : செப் 26, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை-மொய்ப் பணம் வாங்க சென்றவர், கொரோனா தொற்றை இழுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கீரமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில், ஆடி மாதத்தில் மொய் விருந்து விழா களைகட்டும். இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, மொய் விருந்து விழா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆலங்குடி பகுதியில் தற்போது, காதணி விழா,

புதுக்கோட்டை-மொய்ப் பணம் வாங்க சென்றவர், கொரோனா தொற்றை இழுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கீரமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில், ஆடி மாதத்தில் மொய் விருந்து விழா களைகட்டும். இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, மொய் விருந்து விழா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆலங்குடி பகுதியில் தற்போது, காதணி விழா, விருந்து உபசரிப்பு விழா, தேநீர் விருந்து என பல்வேறு பெயர்களில் மொய் விருந்து விழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன், ஆலங்குடியில் டவுன் பகுதியைச் சேர்ந்த ஒருவர், மொய் விருந்து விழா நடத்தி உள்ளார்.

அவருக்கு மொய் செய்ய வேண்டிய ஒருவர், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.மூன்று நாட்களுக்கு முன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவரிடம், விழா நடத்தியவர், மொய்ப் பணம் 1,000 ரூபாயை வாங்க சென்று பணம் வாங்கி வந்தார். பின், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. மொய்ப் பணம் வாங்கச்சென்றவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X