சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வட மாநில தொழிலாளி கொலை நண்பர்கள் இருவர் கைது

Added : செப் 26, 2021
Share
Advertisement
ஓசூர்-ஓசூரில், வட மாநில தொழிலாளியை கத்தியால் வெட்டிக்கொன்ற நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜன் நவுரா, 29; இவரது மனைவி இந்திரா நவுரா, 27; இருவரும், ஓசூர், சின்ன எலசகிரியில் வாடகை வீட்டில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களது வீட்டின் எதிரே, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கிசான், 25, அஜய்தந்தி, 25, ஆகியோர் வசித்தனர். ராஜன்

ஓசூர்-ஓசூரில், வட மாநில தொழிலாளியை கத்தியால் வெட்டிக்கொன்ற நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜன் நவுரா, 29; இவரது மனைவி இந்திரா நவுரா, 27; இருவரும், ஓசூர், சின்ன எலசகிரியில் வாடகை வீட்டில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களது வீட்டின் எதிரே, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கிசான், 25, அஜய்தந்தி, 25, ஆகியோர் வசித்தனர். ராஜன் நவுராவிடம் இருந்து 1,000 ரூபாய் கடனாக கிசான் வாங்கியிருந்தார். அதை திரும்ப கேட்டபோது கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை பணத்தை திரும்ப கேட்ட ராஜன் நவுரா, ஆபாசமாக கிசானை பேசியதுடன், தனக்கு பழக்கமான உள்ளூர் நபர்கள் மூலம் தீர்த்து கட்டி விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.கிசான், தன் நண்பர் அஜய்தந்தியுடன் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு ராஜன் நவுராவை கத்தியால் வெட்டி கொலை செய்தார். இந்திரா நவுரா புகார்படி சிப்காட் போலீசார், கிசான், அஜய்தந்தி ஆகியோரை நேற்று மாலை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X