சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசிடம் 'வாக்கி டாக்கி' திருடிய நான்கு பேர் கைது

Added : செப் 26, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை-கீரனுார் போலீசிடம் 'வாக்கி டாக்கி'யை திருடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் கீரனுார் போலீஸ் ஸ்டேஷனில் அன்பழகன், 52, என்பவர் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர்களான, கீரனுாரைச் சேர்ந்த இன்பா, 45, சுரேஷ், 40, முகேஷ், 47, கண்ணன், 49, ஆகியோர், கடந்த 21ம் தேதி அன்பழகனை அழைத்து மது வாங்கி கொடுத்துள்ளனர். ஏட்டு அன்பழகன் போதையில் இருந்த போது,

புதுக்கோட்டை-கீரனுார் போலீசிடம் 'வாக்கி டாக்கி'யை திருடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனுார் போலீஸ் ஸ்டேஷனில் அன்பழகன், 52, என்பவர் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர்களான, கீரனுாரைச் சேர்ந்த இன்பா, 45, சுரேஷ், 40, முகேஷ், 47, கண்ணன், 49, ஆகியோர், கடந்த 21ம் தேதி அன்பழகனை அழைத்து மது வாங்கி கொடுத்துள்ளனர். ஏட்டு அன்பழகன் போதையில் இருந்த போது, அவரிடமிருந்து வாக்கி டாக்கியை திருடிச் சென்று விட்டனர்.

போதை தெளிந்த பின், வாக்கி டாக்கி காணாமல் போனதை அறிந்த அன்பழகன், எஸ்.ஐ., பிரகாஷிடம் கூறியுள்ளார். விசாரணை நடத்திய டி.எஸ்.பி., சிவசுப்பிரமணியன் வாக்கி டாக்கியை திருடிச் சென்ற நால்வரையும் கைது செய்து வாக்கி டாக்கியை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X