சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உரம் கலந்த தண்ணீர் குடித்த 17 தொழிலாளர்கள் 'அட்மிட்'

Added : செப் 26, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே, உரம் கலந்த தண்ணீரைக் குடித்த 17 விவசாய கூலித் தொழிலாளர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அடுத்த பழையநன்னாவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி, சக்கரவர்த்தி. விவசாயிகளான இவர்களது நிலத்தில் நேற்று 20க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகள் வேர்க்கடலை அறுவடை செய்து
 உரம் கலந்த தண்ணீர் குடித்த 17 தொழிலாளர்கள் 'அட்மிட்'

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே, உரம் கலந்த தண்ணீரைக் குடித்த 17 விவசாய கூலித் தொழிலாளர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அடுத்த பழையநன்னாவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி, சக்கரவர்த்தி. விவசாயிகளான இவர்களது நிலத்தில் நேற்று 20க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகள் வேர்க்கடலை அறுவடை செய்து கொண்டு இருந்தனர்.அப்போது, பக்கத்து நிலத்தில் உள்ள அங்கமுத்து என்பவர் சொட்டு நீர் பாசனத்திற்காக உரம் கலந்து தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். இதை அறியாமல், வேர்க்கடலை அறுவடை செய்து கொண்டிருந்த பெண்கள் உள்ளிட்ட தொழிலாளிகள்17 பேர் உரம் கலந்ததண்ணீரைக் குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். அவர்கள் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதற்கிடையே அந்த தண்ணீரைக் குடித்த அப்பகுதியில் மேய்ந்த மூன்று பசு மாடுகளும் மயங்கி விழுந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X