பொது செய்தி

தமிழ்நாடு

'நலம் நம் கையில்' புத்தக வெளியீட்டு விழா

Added : செப் 26, 2021
Share
Advertisement
ராஜபாளையம்--தாமரை பிரதர்ஸ் மீடியா லிட்., வெளியீடான மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு.கணேசன் எழுதிய 'நலம் நம் கையில்' புத்தகத்தின் இரண்டு பாகங்கள் வெளியீட்டு விழா விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்தது.மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரத்தவியல் டாக்டர் காசி விஸ்வநாதன், உயிர் வேதியியல் நிபுணர் ஜெயேஸ் பிரபாகர் வெளியிட, குழந்தைகள் நல டாக்டர் ராஜாராம், ஐ.எம்.ஏ.,
 'நலம் நம் கையில்'   புத்தக வெளியீட்டு விழா

ராஜபாளையம்--தாமரை பிரதர்ஸ் மீடியா லிட்., வெளியீடான மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு.கணேசன் எழுதிய 'நலம் நம் கையில்' புத்தகத்தின் இரண்டு பாகங்கள் வெளியீட்டு விழா விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்தது.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரத்தவியல் டாக்டர் காசி விஸ்வநாதன், உயிர் வேதியியல் நிபுணர் ஜெயேஸ் பிரபாகர் வெளியிட, குழந்தைகள் நல டாக்டர் ராஜாராம், ஐ.எம்.ஏ., தலைவர்கள் ராமநாதன் - ஸ்ரீவில்லிபுத்துார், ஜவஹர்லால் - ராஜபாளையம், ராம்கோ மருத்துவமனை டாக்டர் தேன்மொழி பாபு ஆகியோர் பெற்றுக்கொண்டனர். டாக்டர் கு.கணேசன் ஏற்புரை வழங்கினார். நம் உடல் நலத்தை பேண உதவும் அடிப்படை மருத்துவ விஷயங்களை, மருத்துவ விழிப்புணர்வு கட்டுரைகளை 'நலம் நம் கையில்' என்ற புத்தகத்தின் இரண்டு பாகங்களிலும் அனைவரும் புரிந்து கொள்ளும் விதம் எளிய நடையில் எழுதி உள்ளார் டாக்டர் கு.கணேசன். இப்புத்தகத்தை வாங்க டோல் பிரி எண் 1800 425 7700ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X