சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரியில் மூழ்கி 2 சிறுமியர் பரிதாப பலி

Added : செப் 26, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்-தஞ்சாவூர் அருகே ஏரியில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகே, செண்பகபுரத்தை சேர்ந்த குமார் மகள் ரூபிகா, 13. அதே பகுதியைச் சேர்ந்த நீலமேகம் மகள் கவுசிகா, 13. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த இருவரும், நேற்று காலை வயல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.காலை 11:00 மணிக்கு, அங்குள்ள

தஞ்சாவூர்-தஞ்சாவூர் அருகே ஏரியில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகே, செண்பகபுரத்தை சேர்ந்த குமார் மகள் ரூபிகா, 13. அதே பகுதியைச் சேர்ந்த நீலமேகம் மகள் கவுசிகா, 13. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த இருவரும், நேற்று காலை வயல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.காலை 11:00 மணிக்கு, அங்குள்ள ஏரியில் முகம் கழுவச் சென்ற ரூபிகா, தண்ணீருக்குள் தவறி விழுந்தார். அதை பார்த்து, அவரை காப்பாற்ற முயன்ற போது, கவுசிகாவும் தண்ணீரில் மூழ்கினார்.சத்தம் கேட்டு வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சென்று சிறுமிகளை மீட்டனர். ஆனால் இருவரும் இறந்து விட்டனர். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த சிறுமிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X