சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜவுளி வியாபாரி கொலை வழக்கில் 6 பேர் கைது

Added : செப் 26, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-- -ஜவுளி வியாபாரி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், அனுமந்தராயன் கோட்டையைச் சேர்ந்தவர் ஸ்டீபன், 35; ஜவுளி வியாபாரி. இவர் செப்., 22 இரவு கொலை செய்யப்பட்டார். போலீசார் நான்கு தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடினர்.திண்டுக்கல் சாமியார்பட்டியைச் சேர்ந்த மன்மதன், 32, மற்றும் 17 - 30 வயதுள்ள ஐந்து
 ஜவுளி வியாபாரி கொலை வழக்கில் 6 பேர் கைது

திண்டுக்கல்-- -ஜவுளி வியாபாரி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், அனுமந்தராயன் கோட்டையைச் சேர்ந்தவர் ஸ்டீபன், 35; ஜவுளி வியாபாரி. இவர் செப்., 22 இரவு கொலை செய்யப்பட்டார். போலீசார் நான்கு தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடினர்.திண்டுக்கல் சாமியார்பட்டியைச் சேர்ந்த மன்மதன், 32, மற்றும் 17 - 30 வயதுள்ள ஐந்து வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியதாவது:கொலையான ஸ்டீபன், அப்பகுதி தி.மு.க., பிரமுகர் இன்பராஜின் கூட்டாளியாக செயல்பட்டுள்ளார். போலி மதுபான விற்பனையில் முறைகேடுகளில் ஈடுபட்டதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஸ்டீபன் பிரிந்தார்.

பின் இன்பராஜ், அவரது கூட்டாளிகள் விற்பனையில் ஈடுபட்டனர். கொலை நடந்த செப்., 22 காலையில் இன்பராஜின் தோட்டத்தில் சோதனை நடத்திய போலீசார், 11 ஆயிரம் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதற்கு போலீசாருக்கு ஸ்டீபன்தான் துப்புக் கொடுத்தார் என்று கருதினர். இதையடுத்து மன்மதன், அவரது நண்பர் சக்திவேல் ஆகியோர், ஸ்டீபனை சம்பவத்தன்று மாலை தனியாக அழைத்துச் சென்று மதுகுடித்தனர்.

பின்னர் ஸ்டீபனை சரமாரியாக வெட்டி, தலையை மட்டும் துண்டித்து, அனுமந்தராயன்கோட்டை பஸ் ஸ்டாப்பில் போட்டுச் சென்றனர்.துப்பு துலங்கியது எப்படி?முதலில் 'சிசிடிவி' காட்சிகள், கிடைத்த தடயங்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களில் பலரை விசாரித்தனர். குற்றவாளிகள் போலீசில் சிக்காமல், தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைய முயன்றதை அறிந்து அங்கு விரைந்தனர்.

செப்., 23ல் அவர்கள் புறப்பட தாமதமானதால், குற்றவாளிகளால் நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை. எனவே, நண்பர்களோடு தேனி மாவட்டத்திற்குள் சுற்றித்திரிந்தனர். போலீசார் பின்தொடர்வதை அறிந்ததால் தனித்தனியாக பிரிந்தனர். இருப்பினும் தேனி மாவட்ட 'சிசிடிவி' காட்சிகள், அலைபேசி சிக்னல்கள் அடிப்படையில் போலீசார், மன்மதன் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான சக்திவேல், 35, என்பவரை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X