சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அமரீந்தரின் சபதம்!

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021
Share
Advertisement
'இத்தனை காலமாக அரசியலில் இருந்து என்ன பயன்; நேற்று வந்த ஒரு கிரிக்கெட் வீரரிடம் தோற்று விட்டோமே...' என, அழுது புலம்புகிறார், பஞ்சாப் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங். இவர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். மக்கள் செல்வாக்கு மிக்கவர். காங்கிரஸ் மேலிட தலைவர்களின் செல்லப்பிள்ளை. இத்தனை பெருமைகள் இருந்தும்,
அக்கம் பக்கம்


'இத்தனை காலமாக அரசியலில் இருந்து என்ன பயன்; நேற்று வந்த ஒரு கிரிக்கெட் வீரரிடம் தோற்று விட்டோமே...' என, அழுது புலம்புகிறார், பஞ்சாப் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங்.

இவர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். மக்கள் செல்வாக்கு மிக்கவர். காங்கிரஸ் மேலிட தலைவர்களின் செல்லப்பிள்ளை. இத்தனை பெருமைகள் இருந்தும், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவருமான சித்துவின் ராஜதந்திர அரசியல் முன், இவரது அரசியல் ஆட்டம் எடுபடவில்லை.

'யார் வந்தாலும் முதல்வர் பதவியிலிருந்து என்னை அசைக்க முடியாது. என் அரசியல் அனுபவத்தின் முன், சித்து எல்லாம் துாசி' என, கூறி வந்தார் அமரீந்தர். ஆனால் சித்து, மறைமுகமாக காரியம் சாதித்து வந்தார். பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களில் ஒரு தரப்பினரை தன் வசப்படுத்தினார். அடிக்கடி டில்லி சென்று ராகுல், பிரியங்கா ஆகியோரை சந்தித்து, அமரீந்தரை போட்டுக் கொடுத்தார்.

துவக்கத்தில் சித்துவுக்கு இதில் வெற்றி கிடைக்காவிட்டாலும், இப்போது அமரீந்தரை முதல்வர் நாற்காலியில் இருந்து அகற்றி விட்டார். இதை அமரீந்தரால் ஜீரணிக்க முடியவில்லை. 'சித்துவுக்கு அரசியல் பற்றி அரிச்சுவடியே தெரியாது. அப்படிப்பட்ட ஒரு நபரிடம் தோற்று விட்டேனே... சித்துவுக்கும், காங்., மேலிடத்துக்கும் சரியான பதிலடி கொடுப்பேன்' என, சபதத்துடன் காத்திருக்கிறார் அமரீந்தர் சிங்.


கவர்னர் பதவி கிடைக்குமா?


'அரசியலில் சாதிக்க வேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது; ஆனால் அதற்குள் என்னை ஓரம்கட்டி விடுவர் போலிருக்கிறதே...' என கவலையில் ஆழ்ந்துள்ளார், குஜராத் முன்னாள் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான விஜய் ரூபானி.

குஜராத் பா.ஜ.,வில் சமீபத்தில் வீசிய அலையில் சிக்கி, முதல்வர் பதவியை இழந்தவர் தான் விஜய் ரூபானி. அடுத்தாண்டு இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இவர் முதல்வர் பதவியில் நீடித்தால் ஆட்சியை தக்க வைக்க முடியாது என கருதியது பா.ஜ., மேலிடம். இதையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் விஜய் ரூபானி. புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'பிரதமர் மோடி,

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலத்தில் முதல்வராக இருப்பது எவ்வளவு பெரிய பெருமை; ஆனால் விஜய் ரூபானிக்கு அந்த பெருமையை தக்க வைத்திருக்க தெரியவில்லையே' என, பா.ஜ., தொண்டர்களே வருத்தப்படுகின்றனர். இதற்கிடையே விஜய் ரூபானிக்கு அடுத்து என்ன பதவி கிடைக்கும் என, இப்போதே குஜராத் அரசியலில், பரபரப்பு பேச்சுகள் துவங்கிவிட்டன.
'இவருக்கு முன் முதல்வராக இருந்த ஆனந்திபென் படேலுக்கு கவர்னர் பதவி தரப்பட்டது. எனவே விஜய் ரூபானிக்கும் கவர்னர் பதவி தான் கிடைக்கும்' என, சிலர் பற்ற வைத்து நெருப்பு பற்றி எரிகிறது. இதைக் கேள்விப்பட்ட ரூபானி, 'எனக்கு, 65 வயது தான் ஆகிறது. அதற்குள் கவர்னர் பதவி கொடுத்து, அரசியலில் இருந்து என்னை கட்டாய ஓய்வு பெற வைக்க நினைக்கின்றனரே...' என, புலம்புகிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X