சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிக்கன் கடை ஊழியர் குத்திக்கொலை

Added : செப் 26, 2021
Share
Advertisement
தர்மபுரி-கடனுக்கு சிக்கன் தராததால் ஆத்திரமடைந்த வாலிபர், கடை ஊழியரை கத்தியால் குத்திக்கொன்றார்.தர்மபுரி மாவட்டம், மல்லாபுரத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை, 38; சோமனஹள்ளியில் ஒரு சிக்கன் கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை, 6:00 மணிக்கு, சோளப்பாடியை சேர்ந்த சுந்தரம், 30, என்பவர் சிக்கன் கடைக்கு வந்துள்ளார். மதுபோதையில் இருந்த அவர், அண்ணாதுரையிடம் கடனாக சிக்கன்

தர்மபுரி-கடனுக்கு சிக்கன் தராததால் ஆத்திரமடைந்த வாலிபர், கடை ஊழியரை கத்தியால் குத்திக்கொன்றார்.

தர்மபுரி மாவட்டம், மல்லாபுரத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை, 38; சோமனஹள்ளியில் ஒரு சிக்கன் கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை, 6:00 மணிக்கு, சோளப்பாடியை சேர்ந்த சுந்தரம், 30, என்பவர் சிக்கன் கடைக்கு வந்துள்ளார். மதுபோதையில் இருந்த அவர், அண்ணாதுரையிடம் கடனாக சிக்கன் கேட்டுள்ளார்.

இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுந்தரம் ஆத்திரத்தில், கடையில் இருந்த கத்தியால், அண்ணாதுரையை குத்தியுள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இண்டூர் போலீசார் சுந்தரத்தை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X