சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மொபைல் டவர்' பெயரில் மோசடி டில்லி, திருப்பூர் கும்பல் 13 பேர் கைது

Added : செப் 26, 2021
Share
Advertisement
சேலம்-மொபைல் போன் கோபுரம் பெயரில், 6.95 லட்சம் ரூபாய் மோசடி செய்த, டில்லி, திருப்பூர், திண்டுக்கல்லை சேர்ந்த 13 பேரை, போலீசார் கைது செய்தனர்.சேலம், சித்தனுார், அய்யனாரப்பன் கோவில் தெருவை சேர்ந்த சகாயமேரி, 45. இவரது மொபைல் போனுக்கு, 2020 ஆக., 27ல் குறுந்தகவல் வந்தது. அதில், 'ஹரியானா மாநிலம், குகன், உதக்விதார் இன்சைடு டவர்ஸ் பி.லிட்., சார்பில், மொபைல் போன் கோபுரம் நிறுவ, இடம் தேர்வு

சேலம்-மொபைல் போன் கோபுரம் பெயரில், 6.95 லட்சம் ரூபாய் மோசடி செய்த, டில்லி, திருப்பூர், திண்டுக்கல்லை சேர்ந்த 13 பேரை, போலீசார் கைது செய்தனர்.

சேலம், சித்தனுார், அய்யனாரப்பன் கோவில் தெருவை சேர்ந்த சகாயமேரி, 45. இவரது மொபைல் போனுக்கு, 2020 ஆக., 27ல் குறுந்தகவல் வந்தது. அதில், 'ஹரியானா மாநிலம், குகன், உதக்விதார் இன்சைடு டவர்ஸ் பி.லிட்., சார்பில், மொபைல் போன் கோபுரம் நிறுவ, இடம் தேர்வு செய்யப்படுகிறது. இடத்துக்கு உரிய வாடகை, பராமரிப்பு ஊதியம் வழங்கப்படும். அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதை நம்பிய சகாயமேரி, ஐந்து தவணைகளில், 6 லட்சத்து, 92 ஆயிரத்து, 500 ரூபாய் செலுத்தினார். அதன் பின், குறுந்தகவல் அனுப்பிய மொபைல் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்பட்டது. சகாயமேரி, அளித்த புகார்படி, சேலம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்தனர்.இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் தனிப்படையினர், குற்றவாளிகளின் மொபைல் எண், பயன்பாட்டை கண்காணித்தனர்.மோசடி கும்பல் பெங்களூருவில் இருந்து சேலம் வருவதை உறுதிப்படுத்தி, நேற்று தயாராக காத்திருந்தனர். பின் புது பஸ் ஸ்டாண்ட் வந்த கும்பலை சுற்றிவளைத்தனர்.

விசாரணையில், டில்லியை சேர்ந்த சிவா, 30 மற்றும் திருப்பூர், திண்டுக்கல்லை சேர்ந்த, 19 - 38 வயதுள்ள 12 பேரை கைது செய்தனர்.அவர்கள் 'இன்சைடு டவர்ஸ்' பெயரில் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து, 2 மடிக்கணினி, 34 மொபைல் போன்கள், 45 சிம் கார்டுகள், 20 வங்கி புத்தகங்கள், 48 ஆயிரத்து, 500 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X