பொது செய்தி

தமிழ்நாடு

யு.பி.எஸ்.சி., தேர்வில்போடி வாலிபர் 344வது இடம்

Added : செப் 26, 2021
Share
Advertisement
போடி -யு.பி.எஸ்.சி., தேர்வில் தேசிய தரவரிசை பட்டியலில் போடியை சேர்ந்த அருண் பாண்டியநாதன் 344வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தேனி மாவட்டம், போடி சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்த முருகேசன் மகன் அருண் பாண்டிய நாதன், 28. பி.டெக்., படித்து டெல்லியில் மத்திய அரசு நிறுவனமான மதர் டைரியில் வேலை செய்தார். ஐ.எப்.எஸ்., ஆக வேண்டும் என்பதால் வேலையை விட்டு சென்னையில் யு.பி.எஸ்.சி.,
 யு.பி.எஸ்.சி., தேர்வில்போடி வாலிபர் 344வது இடம்

போடி -யு.பி.எஸ்.சி., தேர்வில் தேசிய தரவரிசை பட்டியலில் போடியை சேர்ந்த அருண் பாண்டியநாதன் 344வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

தேனி மாவட்டம், போடி சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்த முருகேசன் மகன் அருண் பாண்டிய நாதன், 28. பி.டெக்., படித்து டெல்லியில் மத்திய அரசு நிறுவனமான மதர் டைரியில் வேலை செய்தார். ஐ.எப்.எஸ்., ஆக வேண்டும் என்பதால் வேலையை விட்டு சென்னையில் யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான பயிற்சி மேற்கொண்டார். 2017ல் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. 2018 தேர்வில் முதல் நிலைத்தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. 2019ல் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.

விடா முயற்சியாக 2020ல் தேர்வு எழுதினார். 2021 ஜனவரியில் நடந்த மெயின் தேர்வில் தேர்ச்சிபெற்றார். ஆகஸ்டில் நடந்த நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய தரவரிசையில் 344வது இடத்தில் வெற்றி பெற்றார்.எம்.அருண்பாண்டிய நாதன் கூறியதாவது: வேலையை விட்டுவிட்டு தேர்வுக்காக படித்தேன். விடா முயற்சியாக 4வது முறையில் தேர்ச்சி பெற்றேன். ஐ.எப்.எஸ்., (இந்தியன் பாரின் சர்வீஸ்) பதவி அல்லது ஐ.ஏ.எஸ்., பதவி கிடைக்கும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X