பொது செய்தி

இந்தியா

மம்தா பானர்ஜி இத்தாலி செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி : மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி இத்தாலியில் நடக்கும் உலக அமைதி மாநாட்டிற்குச் செல்ல, மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.ஐரோப்பாவைச் சேர்ந்த இத்தாலியின் ரோம் நகரில் அக்., 6 - 7 தேதிகளில் உலக அமைதி மாநாடு நடக்க உள்ளது. அன்னை தெரசாவை மையமாக வைத்து நடக்கும் இந்த மாநாட்டில், போப் பிரான்சிஸ், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, ஜெர்மன்

புதுடில்லி : மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி இத்தாலியில் நடக்கும் உலக அமைதி மாநாட்டிற்குச் செல்ல, மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.



latest tamil news




ஐரோப்பாவைச் சேர்ந்த இத்தாலியின் ரோம் நகரில் அக்., 6 - 7 தேதிகளில் உலக அமைதி மாநாடு நடக்க உள்ளது. அன்னை தெரசாவை மையமாக வைத்து நடக்கும் இந்த மாநாட்டில், போப் பிரான்சிஸ், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, ஜெர்மன் பிரதமர் ஆஞ்செலா மெர்கல் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டிற்கு வரும்படி மம்தாவிற்கு இத்தாலி அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதேநேரத்தில் குழுவாக வருவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் இத்தாலி மாநாட்டில் மம்தா பங்கேற்க, வெளியுறவுத் துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. அரசியல் பார்வையில், ஒரு மாநில முதல்வரின் தகுதிக்கு இந்த மாநாட்டில் பங்கேற்பது சரியாக இருக்காது என கருதுவதால் அனுமதி மறுக்கப்படுவதாக வெளியுறவு துறை, மம்தாவிடம் தெரிவித்துள்ளது.இதற்கு, ''ஹிந்துக்களுக்கு ஆதரவாக பேசும் பிரதமர், ஹிந்து பெண்ணாகிய என்னை இத்தாலிக்கு அனுப்ப மறுப்பது, அவரது பொறாமை குணத்தை காட்டுகிறது. நான் வெளிநாடு செல்ல ஏங்கவில்லை,'' என மம்தா தெரிவித்துள்ளார்.


latest tamil news




இது குறித்து திரிணமுல் காங்., செய்தி தொடர்பாளர் தெபாங்ஷு பட்டாச்சார்யா தேவ் கூறியிருப்பதாவது:கடந்த முறை மம்தா சீனா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இப்போது இத்தாலிக்கு செல்ல அனுமதியில்லை என்கின்றனர். சர்வதேச உறவுகள் மற்றும் இந்தியாவின் நலனைக் கருதி எடுக்கும் முடிவை ஏற்கிறோம். ஆனால் இத்தாலிக்கு அனுப்ப ஏன் மறுக்கிறீர்கள். மேற்கு வங்கத்துடன் உங்களுக்கு என்ன பிரச்னை? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
27-செப்-202113:36:45 IST Report Abuse
jayvee அமைதிக்கும் இந்தம்மாவிற்கும் என்ன சம்பந்தம்.. இது கிருத்துவ மத பரப்புரை கூட்டம். பேகம் மரியாவாக மாறவேண்டிய காட்டியதில் உள்ளார் போல
Rate this:
Cancel
Jai -  ( Posted via: Dinamalar Android App )
26-செப்-202121:27:40 IST Report Abuse
Jai , வெளியுறவு துறை மாநில அரசின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது. வெளிநாட்டு மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்பதை ராஜ தந்திரத்துடன் முடிவெடுக்க வேண்டும். அதெல்லாம் வெளியுறவு குழுவினர் முடிவெடுப்பார்கள்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
26-செப்-202114:19:18 IST Report Abuse
Vena Suna மம்தாவை பார்த்து மோடி ஜி பயப்படவில்லை. மம்தா ஏன் அனுமதிக்கப்படவில்லை என்றால் சர்வதேச அரங்கில் அவர் பொறுப்பற்று எதையாவது பேசி நாட்டிற்கு அவமானம் வரவேண்டும் என்ற நோக்கில் செயல்படுவார் என்பது வெளிப்படை.அதனால் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X