சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு: தி.மு.க., ஆட்சியின் மீது சேற்றை வாரி இரைப்பது போல, அ.தி.மு.க.,வின் முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். எங்களின் 130 நாட்கள் ஆட்சியில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பழனிசாமி ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.'டவுட்' தனபாலு: ஆனால், 'ஆட்சிக்கு வந்த
 'டவுட்' தனபாலு

தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு: தி.மு.க., ஆட்சியின் மீது சேற்றை வாரி இரைப்பது போல, அ.தி.மு.க.,வின் முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். எங்களின் 130 நாட்கள் ஆட்சியில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பழனிசாமி ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

'டவுட்' தனபாலு: ஆனால், 'ஆட்சிக்கு வந்த நுாறு நாட்களில் அனைத்து முக்கிய பிரச்னைகளையும் தீர்ப்போம்; அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்' என்றல்லவா தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு அனைவரும் கூறினர். அதை, இந்த 130 நாட்களில் மறந்து விட்டீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது!lll

முதல்வர் ஸ்டாலின்: 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் அரசுக்கு சிறப்பான பெயரை தேடி தந்துள்ளது. முதலில், அரசை தேடி மக்கள் வந்தனர்; இப்போது மக்களை தேடி அரசு செல்கிறது. மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. 'அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்' என்பர். அழாத பிள்ளைக்கும் பால் கொடுக்கும் தாயாக தி.மு.க., அரசு இருக்கும்.

'டவுட்' தனபாலு: ஆட்சிக்கு வந்துள்ள ஐந்தே மாதங்களில் பல மருத்துவ திட்டங்களை செயல்படுத்தி உள்ளீர்களே... இதற்கு காரணம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்ரமணியமா அல்லது இந்த அரசுக்கு தலைமை வகிக்கும் நீங்களா என்பதே மக்களின் 'டவுட்!'lll

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: நான் மேற்கொண்ட முயற்சியால், கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகரித்துள்ள வகையில் இறப்பு சான்றிதழ் இருப்பது அவசியம். அத்தகைய இறப்பு சான்றிதழை வழங்க, தமிழக அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.

'டவுட்' தனபாலு: கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பு, கண்டிப்பாக, குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாகத் தான் இருக்கும் என்பதில், 'டவுட்' இல்லை. எனினும், கொரோனாவால் வீட்டின் தலைவர்களை இழந்த ஏழை குடும்பங்களுக்கு கிடைக்க உள்ள நிதியுதவி பல விதங்களில் பயனாக இருக்கும் என்பதில், 'டவுட்டே' இல்லை!
காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்: கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் நடக்கும் சூதாட்டங்களில் கோடிக்கணக்கான பணம் புழங்குகிறது. எனவே அதை தடுப்பதற்குப் பதில், விளையாட்டுகளில் நடக்கும் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக ஆக்கி விட்டால், அரசுக்கு வரி வருவாயும் கிடைக்கும். வளர்ந்த நாடுகள் பல, இதை சட்டப்பூர்வமாக ஆக்கியுள்ளன.

'டவுட்' தனபாலு: வளர்ந்த நாடுகளில் அரசின் உயர் பதவி வகிப்பவர்கள், அவர்களின் வாரிசுகள் பெரும்பாலும் லஞ்சம், ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவதில்லை. வெளிநாடுகளில் சொத்து சேர்ப்பதில்லை. ஆனால் நம் நாட்டில் அப்படியில்லையே... சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக ஆக்க விரும்பும் உங்களுக்கு அந்த தொழிலிலும் கால் பதிக்க ஆசை இருக்கிறதோ என்ற, 'டவுட்' மக்களுக்கு வந்திருக்கும். ஏனெனில் பல நாடுகளில் நீங்கள் பல தொழில்கள் செய்கிறீர்கள் அல்லவா!

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: முதல் முறையாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை வகித்தது; 25 ஆண்டுகளில் முதல் முறையாக இஸ்ரேலுக்கு சென்றது; மங்கோலியா நாட்டுக்கு சென்றது போன்றவற்றில் முதல் சாதனை படைத்துள்ள பிரதமர் மோடி, சர்வதேச உறவில் நம் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார்.

'டவுட்' தனபாலு: பா.ஜ.,வைச் சேர்ந்த பிரதமர் மோடியின் ஏழு ஆண்டு கால ஆட்சி, இந்தியா இதுவரை கண்டிராத சிறப்பான நிர்வாகத்தை கொடுத்து வருகிறது என்பதில், யாருக்கும், 'டவுட்' வராது. அதனால் தான், பெரும்பாலான சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., வென்று வாகை சூடி வருகிறது. ஆனால், தமிழகத்தில் தான் அப்படியில்லை. இங்கு எப்போதோ என்பது தான், மக்களின், 'டவுட்!'

திருவனந்தபுரம் காங்., - எம்.பி., சசிதரூர்: பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் அதானி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய பா.ஜ., அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற காங்., கோரிக்கையில் நானும் இணைகிறேன்.

'டவுட்' தனபாலு: குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை தொழிலதிபர் அதானி குத்தகைக்கு வாங்கியுள்ளதால், அங்கு நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு அவர் பொறுப்பேற்க முடியுமா... சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான 'சத்யமூர்த்தி பவனுக்கு' வௌியே பல கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அந்த கடைகளில் மோசடி நடந்தால், காங்., பொறுப்பேற்குமா? எனவே, அதானி துறைமுகம் என்றதும் காங்கிரசார் இதை பிரச்னை ஆக்குகின்றனரோ என்ற 'டவுட்' மக்களுக்கு வந்துள்ளது!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
26-செப்-202115:29:31 IST Report Abuse
D.Ambujavalli குஜராத் துறைமுகத்தை குத்தகை எடுக்கும்போதே அதன் பொறுப்பாளராகி விடுகிறார் அதானி ஒரு வீட்டில் வாடகை / லீசுக்கு குடியிருப்பவர், தன அலட்சியத்தால் தீப்பிடிக்க வைத்துவிட்டு, நான் வெறும் குடித்தனக்காரர்தான், சொந்தக்காரர் தான் வந்து அணைக்க வேண்டும் என்று சொல்வது போலிருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X